சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி சந்துரு கொடுத்த சட்ட ஆலோசனை வழக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது. சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மாணவி ஒருவர் பிஎச்டி படித்து வந்திருக்கிறார். இந்த மாணவி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இந்த மாணவியை சக ஆராய்ச்சி மாணவர்கள் சிலரும், பேராசிரியர்களும் வன்புணர்வு செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதமே இவர் புகார் அளித்திருந்தார்.
மேலும், அந்த மாணவியை தலீத் எல்லாம் இங்கே படிக்க வந்தால் இப்படித்தான் என்று திட்டி அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், வளாகத்திலும் ஆய்வுக்கூடத்திலும் வைத்து இரண்டு முறை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர், இதனால் அந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சி செய்திருக்கின்றார். அந்த மாணவி புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அதில் இரண்டு பேராசிரியர்களும் அடங்கும் என்பது குறிபிடத்தக்கது. இது தொடர்பாக ஐஐடி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் காவல்துறை ஆணையருக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
பாலியால் வென்கொடுமை வழக்கு:
இதில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலும் ஒரு வருடமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இப்படி பல கொடுமைகளை சந்தித்த இந்த மாணவி அளித்த புகார் ஒரு வருடமாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் இருந்தது. தற்போது திடீரென வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு காரணம் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் தான் காரணம். ஏன்னா, சமீபத்தில் இவரின் வழக்கு ஒன்றை அடிப்படையாக வைத்து நடிகர் சூர்யா அவர்கள் ஜெய் பீம் படத்தில் நடித்து இருந்தார். முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது எடுத்த வழக்கை அடிப்படையாக வைத்து ஜெய் பீம் படம் எடுத்திருந்தார்.
ஜெய் பீம் படம் :
கடலூரில் ஒருவர் பொய் கேசில் கைது செய்யப்பட்டு போலீசார் அவரை அடித்துக் கொண்ட வழக்கை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இருளர், பழங்குடி மக்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டம் உரிமைக்கான குரல் என்று பல விஷயங்களை படத்தில் பேசி இருந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஐஐடியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த மாணவியும் ஜெய் பீம் படம் பார்த்து நம்பிக்கையை பெற்று இருக்கிறார்.
மாணவிக்கு நம்பிக்கை கொடுத்த படம்:
இந்த படத்தை பார்த்த மாணவியின் நண்பர்கள் அவரை நீதிபதி சந்துருவை நேரில் சென்று சந்திக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து வழக்கில் என்ன செய்வது என்று தெரியாமல் மனமுடைந்து கஷ்டப்பட்டு இருந்த அந்த மாணவி வேறு வழியின்றி முன்னாள் நீதிபதி சந்துரு சந்தித்திருக்கிறார். மாணவியின் ப்ரச்சனையை உணர்ந்த முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கை கையில் எடுத்து உள்ளார். பின் மாணவியை உடனே அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தை அணுகும்படி கூறினார். அதோடு இந்த வழக்கு தொடர்பாக சிலரிடம் சந்துரு பேசினார். தற்போது இந்த வழக்கில் பெண்கள் சங்கம் தலையிட பின் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து இருக்கிறது.
வழக்கின் போக்கை மாற்றிய நீதிபதி:
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மீண்டும் புதிதாக பதிவு செய்யப்பட்டு வழக்கில் எஸ் /எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் சேர்க்கப்பட்டது. முடங்கி கிடந்த வழக்கில் சேர்க்கப்படாமல் இருந்த முக்கிய பிஎச்டி கைடு பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டது. இப்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது வழக்கு தீவிர விசாரணைக்கு சென்றுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி தற்போது மூன்று பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
நம்பிக்கையுடன் போராடும் பெண்:
இதனால் வழக்கில் நடவடிக்கைகள் காலம் தாமதமாகி வருகிறது. போலீஸ் மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. இப்படி எந்த ஒரு முன்னேற்றம் இல்லாமல் இருந்த வழக்கில் முன்னாள் நீதிபதி வழக்கின் போக்கை மாற்றி இருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு முன்னாள் நீதிபதி சந்துரு உதவி இருப்பது பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வழக்கு முடியும் வரை சொந்த மண்ணை மிதிக்க மாட்டேன் என்று அந்த மாணவியும் சென்னையில் நம்பிக்கையுடன் தங்கி இருக்கிறார். கூடிய விரைவில் இந்த மாணவிக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.