தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை – ஆஸ்காரின் அதிகாரபூர்வ பக்கத்தில் இடம்பெற்ற ஜெய் பீமின் 12 நிமிட காட்சி இதோ.

0
652
jaibhim
- Advertisement -

ஆஸ்கர் யூட்யூப் தளத்தில் சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் வீடியோ பகிரப்பட்ட தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது.

-விளம்பரம்-
Suriya's Jai Bhim featured on Oscars YouTube Channel! Tamil Movie, Music  Reviews and News

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். மேலும், சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஜெய் பீம் படத்திற்கு வாழ்த்து சொல்லிய பிரபலங்கள்:

அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது.

Amazon's 'Jai Bhim' emerges as one of India's most watched films; Madhavan,  Arya, Vishal Krishna heap praise

ஜெய் பீம் படத்துக்கு கிடைத்த விருது:

மேலும் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கான போட்டியில் ஜெய்பீம் இடம்பெற்றிருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது ஜெய்பீம் படத்துக்கு இன்னொரு கௌரவம் கிடைத்துள்ளது. அது வேறு ஒன்றுமில்லை, ஆஸ்கர் விருதின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஜெய் பீம் படம் தொடர்பான சிறப்பு வீடியோ பதிவு இடம்பெற்றுள்ளது. பொதுவாக திரைப்பட கலைஞர்களின் உழைப்பை, ஒரு திரைப்படத்தின் அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஆஸ்கர் அகாடமி உலக சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தங்கள் பக்கங்களில் பதிவிட்டு உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.

-விளம்பரம்-

ஆஸ்கர் அகாடமியின் யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படம்:

அதன் அடிப்படையில் இந்த #SceneAtTheAcademy-யில் தற்போது ஜெய்பீம் படத்தின் காட்சிகளும் இயக்குனர்களின் விவரிப்புகள் குறித்து 12 நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கரின் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து படத்தைப் பற்றியும் மேனாள் நீதிபதி சந்துருவின் முயற்சிகளையும் பாராட்டி பதிவிட்டு உள்ளார்கள். மேலும், ஆஸ்கர் அகாடமியின் யூடியூப் பக்கத்தில் #SceneAtTheAcademy பிரிவில் வெளியாகியுள்ள முதல் படமாக ஜெய் பீம் படம் திகழ்கிறது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதோடு பதிவேற்றப்பட்ட 10 மணி நேரத்தில் 45 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது.

சூர்யா நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஜெய்பீம் படத்திற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றார்கள். மேலும், ஜெய்பீம் படத்தை தொடர்ந்து சூர்யா அவர்கள் ஹரி இயக்கத்தில் அருவா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement