சூரரை போற்று என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் போலீஸ் கூட பழங்குடியினர் மக்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்ட பழங்குடியினர் கதை அப்படியே உண்மையாக நடந்த கதை தான்.
இந்த படத்தில் ராஜாகண்ணு மற்றும் செங்கேணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் . இதில் லிஜோமோல் இவர் தமிழில் சசி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரியாகவும், சித்தார்த்திற்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஜெய் பீம் படத்தில் நடித்தது இவர் தான் என்று தெரிந்தது பலரும் வியந்து போனார்கள். மேலும், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ரகசியமாக திருமணத்தை கூட முடித்து இருக்கிறார். நடிகை லிஜோமோல் ஜோஸ் அவர்கள் கேரளாவை சேர்ந்த அருண் அண்டனி என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.