ஜெய் பீம் படத்தில் நடித்ததால் சிறுமிக்கு நேர்ந்த சோகம், குவியும் கண்டனங்கள் – நிஜத்திலும் உதவுவாரா சூர்யா ?

0
1025
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், பழங்குடியினர் பெண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் பார்த்து தமிழக முதல்வர் முதல்வர் ஸ்டாலின் முதல் கமலஹாசன் வரை பல பிரபலங்களும் இந்த படம் குறித்து சோசியல் மீடியாவில் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுடன் நடித்த சிறுமிக்கு பள்ளியில் இருந்து TC கொடுத்து உள்ளதாக தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஜெய் பீம் படத்தில் சூர்யா அவர்கள் கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அதை பார்த்து சிறுமி அதே போல் கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார். அந்த காட்சியின் மூலம் அந்த சிறுமி பிரபலமானார். இந்நிலையில் இந்த படத்தில் அந்த சிறுமி நடித்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நடிகர் ரியாஸ் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து பலரும் குழந்தைக்கு என்ன ஆனது? எதனால் பள்ளியில் இருந்து நீக்கி விட்டார்கள்? மேலும் ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் பதிவிடுங்கள்.

எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், அந்த சிறுமியை நீக்கிய பள்ளி நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் சூர்யாவிற்கு தெரிய வருமா? தகவல் அறிந்த பிறகு சூர்யா அந்த குழந்தைக்காக என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், சூர்யா அவர்கள் ஏற்கனவே நிறைய மாணவர்களை தன்னுடைய அறக்கட்டளை மூலம் படித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு இந்த குழந்தையின் வாழ்க்கைக்கும் சூர்யா பலவகையில் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement