‘வெறிபிடித்தப் பட்டி போல ஒரு கூட்டத்தில் பேசியதை கேட்டு’ – BJP மணிகண்டனை சூசகமாக தாக்கிய ஜேம்ஸ் வசந்தன்.

0
238
James
- Advertisement -

பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் சமீபத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கேலிக்கு உள்ளான நிலையில் தற்போது மணிகண்டன் குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார். தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

அதே போல இவை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீப காலமாக இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ மேடை நிகழ்ச்சிகளிலோ காண முடிவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அனைவர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.

- Advertisement -

ஜேம்ஸ் வசந்தன் சமீப காலமாக மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் வரும் தேர்தலில் அவர் பிரதமர் ஆகவே கூடாது என்பது போல அடிக்கடி பதிவுகளை போட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பா ஜ க பேச்சாளர் மணிகண்டன் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். தேர்தல் வந்தாலே கட்சிகளின் பிரச்சாரங்கள் என்பதுவழக்கமான ஒரு விஷயம் தான்.

அதே போல மக்களை கவர சினிமா பிரபலங்கள், பேச்சாளர்கள் என்று களமிறக்கி தங்கள் காட்சிக்காக பல கட்சிகளும் பிரச்சாரம் செய்ய வைப்பதும் வழக்கம் தான். அந்த வகையில் பா ஜ கவிற்கு ஆதரவாக சமீபத்தில் மணிகண்டன் பேசிய பேச்சி பெரும் வைரலானது. அதிலும் பாஜகவுக்கு ஒரு மணிகண்டன் வந்து விட்டேன் டா, இனி விடமாட்டேன். அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்று நாக்கை மடித்து துள்ளி குதித்து பேசிய வீடியோ பெரும் வைரலானது.

-விளம்பரம்-

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இவரது வீடியோ சமுக வலைதளத்தில் கேலிக்கும் உள்ளானது. இப்படி மணிகண்டன் பேச்சி குறித்து சூசக பதிவு ஒன்றைய் போட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘ அண்மையில் ஒரு அரசியல் பரப்புரைக் காணொலி பார்த்தேன். ஒரு குறிப்பிட்டப் பேச்சாளர். முன்பே எனக்கு இவரைத் தெரியும். பட்டிமன்றங்களிலெல்லாம் பேசுபவர். இப்போது வெறிபிடித்தப் பட்டி போல ஒரு கூட்டத்தில் பேசியதை (குரை குரை என்று குரைத்ததை) கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

படித்தவர் என்பவர்க்கு பண்பு இல்லாமல் போகலாம், பகுத்தறிவு இல்லாமல் போகாதே; போகக்கூடாதே. இவர் தன் தலைவரை புகழ்ந்தால் பிரச்சனையில்லை; அவருக்காக சாவேன் என்கிறார். அவருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்கிறார். என்ன ஒரு பிற்போக்குத்தனம்! தலைவனை ஆராதிக்க ஒரு அளவில்லையா? அந்த ஆளுக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு ஆதரவாளர் என்பவர் இப்படியா நிலைகெட்டுப் போவது? 2024-லிலும் இப்படி தற்குறிகள் இருப்பதை நம்பமுடியவில்லை. ஆனால், கண்டேன்! கேட்டேன்! இருக்கிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement