கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார் இவரது எந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் புரிந்து வந்தால் இருந்தது இப்படி ஒரு நிலையில் இளையராஜா பிரித்து விமர்சித்ததற்கான விளக்கம் ஒன்றை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அதில் ‘ இசைஞானியின் ஒரு கருத்தை நான் விமர்சித்ததை கடுமையாகச் சாடி சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அது ஒன்றும் நான் எதிர்பாராதது அல்ல. இத்தனை காலமாக புகழின் உச்சியில் இருக்கும் அவரைப் போன்றவர்க்கு எவ்வளவு ஆதரவாளர் இருப்பர் என்பது தெரியாதா என்ன?
அவரைக் கொண்டாடுகிற ரசிகருக்கு அது சினத்தை உண்டுபண்ணும் என்பதை அறியாதவனா நான்? அவர்களுடைய எதிர்வினையை முற்றிலும் புரிந்துகொள்கிறேன். ஆனால், சமீபத்தில் அவர் மோதியின் ஆதரவாளராக மாறியதிலிருந்து ஒரு புதிய ஆதரவுக் கூட்டம் அவருக்கு உருவாகியிருப்பதும் நமக்கெல்லாம் தெரியும். இது தேசத்தில் வெறுப்பை விதைத்து அறுவடை செய்துகொண்டிருக்கும் கூடாரத்தின் சுயநல செயல்பாடேயொழிய கருத்துபூர்வமான ஆதரவல்ல.
நாளை இசைஞானி கம்யூனிஸ்டுக்கு ஆதரவு தெரிவித்து ஏதாவது பேசிவிட்டால் இதே கூட்டம் அவரைத் தூற்றி, தூக்கியெறிந்து அசிங்கப்படுத்தும் என்பதும் நமக்குத் தெரியும். அவர்கள் என்னுடைய இந்த விமர்சனத்துக்கு மதச்சாயம் பூசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தெரிந்தது அது ஒன்றுதான். சாமானியருக்கெல்லாம் மதவெறி ஊட்டப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ளவர்க்கு அதுதான் அன்றாடப் பிழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் இந்த சாமானியர் சிந்திக்க விடாமல் தடுக்கப்படுகின்றனர். அவர்களிடம் கேட்கிறேன் – இசைஞானியின் பொதுவெளிச் செயல்பாட்டை விமர்சிக்கிற என்னால்/என்னைப் போன்றவரால் எப்படி அவர் இசையை இன்னமும் ரசிக்க, சிலாகிக்க முடிகிறது? மதம் காரணமாக அவரை வெறுத்தால் எப்படி அவரை என்னுடைய மானசீகக் குருவாகப் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ள முடியும்? எப்படி அதே மதத்தைச் சார்ந்த MSV ஐயாவை என்னால் கொண்டாட முடியும்?
கடந்த மாதம் என்னுடைய பார்ப்பன சமூகத்துத் தோழர்களின், குடும்பங்களின் சில நல்ல அம்சங்களைப் பற்றி எழுதினேனே, அவர்களெல்லாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் என் கருத்தைச் சொல்லத்துணிந்த எனக்கு, மத நம்பிக்கையோ, பிற மதங்கள் மீது வெறுப்போ இருந்தால் அதைச் சொல்ல அஞ்சுவேனா?ஒற்றுமையாய் வாழ்ந்த இந்த நாட்டில் மறுபடியும் ஒற்றுமை நிலவத்தான் போகிறது என்று திண்ணியாமாக நம்புகிறவன் நான்.
நீங்களும் நானும் இதே தமிழ்ச் சமூகத்தில் சகோதரர்களாய் கைகோர்த்து வலம் வரத்தான் போகிறோம். சமூகவலைதளத்திலகத்தில்கச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு துறவி சொன்ன சாட்டையடி உண்மையை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் – “கடவுள் இருப்பவனுக்கு மதம் கிடையாது; மதம் இருப்பவனுக்குக் கடவுள் கிடயாது.” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.