இளையராஜா இசையமைத்த ரஜினி பட பாடலில் இருக்கும் பிழை – 30 ஆண்டுகள் கழித்து சுட்டிகாட்டிய ஜேம்ஸ் வசந்தன்.

0
704
James
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அதோடு இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலமாக இளையராஜா மீது பல விதமான குற்றசாட்டுகள் வருகின்றன. குறிப்பாக மேடை நாகரீகம் இல்லாமல் இருப்பது, மற்றவர்களை கேவலமாக பேசுவது என பலர் இளையராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அவர்களில் இசையமைப்பாளர் மற்றும் தொகுப்பாளராக ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். இவர் பல காலமாகவே இளையராஜா மீது பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் இளையராஜாவைவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதில் இளையராஜா ஒரு சக மனிதராக அவர் மிகவும் மட்டமானவர் என்றெல்லாம் விமர்சனம் செய்து இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இளையராஜா இசைமத்த பாடலில் பிழை இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். ரஜினி இயக்கிய ‘வள்ளி’ திரைப்படத்தில் என்னுள்ளே என்னுள்ளே பாடல் பெரும் ஹிட் அடித்தது . இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் குறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘ நேற்றுதான் இந்தப் பாடல் வரியைப் பார்த்தேன், அதிர்ச்சியுற்றேன். எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இந்தப் பிழையை அனுமதித்தார் என்று!

“என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” இத்தனை நாளும் அது “… பல மின்னல் ஏழும் …” என்றே நினைத்திருந்தேன். ஒன்று, அந்தக் குறில் அந்த சந்தத்துக்கு வராது என்று சொல்லி கவிஞரை அந்தச் சொல்லை மாற்ற வைத்திருக்க வேண்டும். அல்லது, அது நன்றாக இருக்கிறதாய் நினைக்கும் பட்சத்தில் அதை குறிலாகப் பாடவைத்திருக்க வேண்டும் பாடகரை.

-விளம்பரம்-

சில இடங்களில் சில ஒப்புரவுகள் செய்வது தவிர்க்க இயலாதுதான் என்றாலும், இவ்வளவு அப்பட்டமான சிதைவை நியாயப்படுத்தவே முடியாது. இது மொழிக்குச் செய்த இரண்டகம். *சிலர் விளக்கச் சொல்லி கேட்பதால் அதையும் இங்கேயே சேர்த்து விடுகிறேன். இந்த சந்தம் – தன்னன்னா தன்னன்னா – தன தன்னன் னானன் னானா இரண்டாவது வரியின் இரண்டாவது சீர் “னானன்..” ‘னா’ என்கிற நெடிலுடன் தொடங்குகிறது. அதற்கு எழுதப்பட்டிருக்கிற ‘எழும்’ என்பது குறிலுடன் தொடங்குகிறது.

அதை இந்தப் பாடலில் பாடியிருப்பது போல சமத்தில் பாடினால் நெடிலாக மட்டுமே பாட இயலும். அதைச் சரிசெய்ய விழைந்தால், சமம் தள்ளிப் பாடினால் குறிலாக ஒலிக்கை வைக்க இயலும். இங்கே பிழையாக எழுதப்பட்டு, பிழையாகவே பாடப்பட்டிருக்கிறது என்பதுதான் செய்தி. குறில்-நெடில் என்பவையே மொழியின் அடிப்படை. கவிஞர்கள் சந்தத்துக்கு பாடல் எழுதும்போது இதுதான் அவர்களது மிகப்பெரிய சவால். எல்லா நல்ல கவிஞரும் பிழையின்றி எழுதுபவர்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement