தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள்.

தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார்.

Advertisement

சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார். இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்னும் சில தினங்களில் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து கூறி வரும் நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ தமிழக அரசியலில் இன்னொரு புதுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை, நடிகர் விஜய் தீவிர அரசியலுக்குள் இறங்குவார் என்று. வழக்கமான “நடிகனுக்கு என்ன தெரியும் அரசியலைப் பற்றி?” விமர்சனங்கள் வலம்வரத் தொடங்கி விட்டன.

Advertisement

மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற தூண்டல் பல்வேறு துறைகளில் இருக்கிற பலருக்கும் ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அது வந்துவிட்டது இவருக்கு. அவ்வளவுதான்! அந்தத் துளைப்பு வந்துவிட்ட விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது. நூறுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்க்கிற, உச்சத்திலுள்ள ஒரு நடிகர் தன் தொழிலுக்கே ஊறுவிளைவிக்கக்கூடிய ஒரு செயலில் அவ்வளவு எளிதாக இறங்கிவிடுவாரா?

Advertisement

எவ்வளவு எண்ணங்கள் ஓடியிருக்கும்? அதற்குப் பின்பும் அவர் இதில் இறங்குகிறார் என்றால், தன் தொழிலைத் தாண்டி இந்தப் பயணம் இவருக்கு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால் அந்த உந்துதல் உண்மைதானே? இது என் புரிதல். வல்லரசு நாடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்த்து நின்று ஓராண்டுக்கும் மேலாகக் கடுமையாகப் போரிட்டு வரும் குட்டி நாடான யுக்ரெய்ன் அதிபர் செலன்ஸ்கி ஒரு காமெடி நடிகர்தானே!

நடிகர், தயாரிப்பாளர் என்று இருந்தவர் திடீரென ஒரு நாள் தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று அறிவித்தவரைத்தானே அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்கள் தீர்ப்பு மிகச்சரி என்று தொடர்ந்து தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறாரே! புட்டினுக்கே சிம்மசொப்பனமாக விளங்குகிறாரே! நோக்கம் சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. பார்க்கலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement