எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளரின் பாடலில் பிழை இருக்க முடியும் – இளையராஜா பாடல் குறித்து ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு.

0
765
James
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். மேலும், இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர்.சமீபத்தில் இளையராஜாவுக்கு Mp சீட் கிடைத்து இருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட இளையராஜாவிற்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படி அடுத்தடுத்து இளையராஜாவிற்கு மத்திய அரசில் இருந்து கௌரவம் குவிந்து வரும் நிலையில் இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றில் இருக்கும் முரண் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் : –

- Advertisement -

கோவையில் ஒருசில வருடங்களுக்கு முன் ‘பாடல் எழுதும் பயிற்சிப் பட்டறை’ ஒன்றை நடத்தினேன். அதில் எப்படி கொடுக்குப்படுகிற சந்தத்துக்கு பாடல் எழுதுவது, சந்தங்களை எப்படி பிரித்து விளங்கிக் கொள்வது, குறில்-நெடில் அடிப்படை போன்றவற்றை விளக்கிக் கொண்டிருந்தேன்.அப்போது பல திரைப்படப் பாடல்களை எடுத்துக்காட்டுகளாக சொல்லும்போது “பருவமே புதிய பாடல் பாடு” என்கிற பாடலில் உள்ள முரணைச் சொல்லும்பொது பலர் (அனைவருமே) அதிர்ச்சிக்குள்ளாகினர்.

எப்படி இவ்வளவு பெரிய இசையமைப்பாளரின் பாடலில் பிழை இருக்க முடியும் என்று என் கூற்றை சந்தேகித்தனர்.பிறகு நான் சொன்ன சந்த விளக்கத்தையும், இது வர்த்தகத் துறை என்கிற அதன் பின்னணியையும் நினைவூட்டிய பிறகு ஏற்றுக்கொண்டார்கள். இன்னொரு விஷயத்தையும் சொன்னேன். “அவர் ஏதோ இதைப்பற்றிய புரிதல் இல்லாத இந்தத் தலைமுறை அரைவேக்காட்டு இசைக்கலைஞர் அல்ல; இதைத் தெரிந்தே (poetic allowance) கவிதைக் கொடுப்பனவு சலுகையைப் பயன்படுத்தி இதைச் செய்திருக்கிறார்” என்று.

-விளம்பரம்-

இருந்தாலும், அவர் உருவாக்கிய அந்த அழகுச் சந்தங்களுக்கு, அற்புதமான எளிமையான ராகத்திற்கு பிழையற்ற ஒரு பாடலை எழுதியிருக்கலாம் என்பது ஆதிகாலந்தொட்டு அவரது ரசிகனாக இருக்கும் என் போன்றோரின் ஏக்கம்!*வைரமுத்து, தாமரை, யுகபாரதி போன்றோர் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. இரண்டு நாட்கள் கூடப் போனாலும் குறில், நெடில் பிசகின்றி கச்சிதமாக எழுதித் தந்திருப்பார்கள் ஒரு அற்புதமானப் பாடலை என்று பதிவிட்டு இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

James

ஏற்கனவே இளையராஜாவை விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் ஒரு சில பதிவுகளை போட்டு இருந்தார். அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த போது கூட இளையராஜா குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த நாடு பார்த்து வருகிற சர்ச்சைக்குரியவரை, ஒரு இனக்கலவரத்தின் கறைபடிந்தவரை, இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கிற சமத்துவச் சிந்தனையுள்ள ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? என்று பதிவிட்டு இருந்தார். அந்த பதிவை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்

Advertisement