இளையராஜாவை புகழ்ந்த வாயால் அவரை தூற்றுகிறாயே, இழிபிறவியே – திட்டி தீர்த்தவருக்கு கூலாக பதில் சொன்ன ஜேம்ஸ் வசந்தன்.

0
748
james
- Advertisement -

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா தான் எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கூறியிருப்பது, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள். இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவு கண்டு அதன் செயல்பாடுகளை செய்து வருபவர் மோடி என்று இளையராஜா மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.

- Advertisement -

இளையராஜாவிற்கு அனுப்பப்பட்ட சம்மன் :

இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது என்னவெனில் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குநர் சென்னை மண்டலத்தில் இருந்து சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், இளையராஜ போகவில்லை. பின்னர் மீண்டும் ஜிஎஸ்டி புலனாய்வு துறையில் இருந்து மார்ச் 21 ஆம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

James

விமர்சனத்திற்கு உள்ளான இளையராஜா :

அதே காரணங்களை குறிப்பிட்டு மார்ச் 28ஆம் தேதி காலை தேசிய புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நெருக்கடி காரணமாகவே இளையராஜா மோடியை புகழ்ந்து பேசினார் என்று பேச்சுக்கள் துவங்கிவிட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் தன் முகநூல் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

இளையராஜா குறித்து ஜேம்ஸ் வசந்தன் :

அதில், கடந்த 20 ஆண்டுகளாக இந்த நாடு பார்த்து வருகிற சர்ச்சைக்குரியவரை, ஒரு இனக்கலவரத்தின் கறைபடிந்தவரை, இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கிற சமத்துவச் சிந்தனையுள்ள ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? எனக்குப் பிடித்தவர், என் அபிமானத்துக்குரியவர் என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை. சந்தேகத்துக்கு இடமான ஒருவரை நிகரற்ற ஒரு வரலாற்றுத் தலைவனுடன் ஒப்பிட்டதால்தான் எதிர்ப்பு வருகிறது.

சவுக்கு வீடியோவை பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன் :

எஞ்சியிருக்கிற அந்த ஒரே உன்னத விருது இலக்கா? கலைத்துறை சார்பாக நியமிக்கப்படுகிற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இலக்கா? அல்லது மாநில ஆளுகை மீது ஏதாவது சொந்தப் பகையா?இப்படிப் பலவற்றைத் தூண்டுகிறது அவரது கூற்று என்று விமர்சனம் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இளையராஜா வாழ்நாளில் வரி கட்டியதே இல்லை என்று சமீபத்தில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

அதில் ‘கலையையும் கலைஞனையும் பிரித்துப் பார்க்கத் தெரியாதவர்க்கும், துரதிர்ஷ்டவசமான இந்த நிகழ்வின் உண்மைப் பின்னணியையும் தெரிந்து கொள்ள விரும்புபவர்க்கும் இந்தப் பகிர்வு.GST Council இளையராஜாவுக்கு அனுப்பிய நோட்டீஸ் எல்லாம் நேற்று எல்லா தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டது. இதில் கற்பனை எதுவும் இல்லை.சங்கர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பத்திரிகையாளராக நேர்மையாக வாழ்ந்து ஐயத்துக்கு அப்பாற்பட்டு தன்னை நிரூபித்தவர். உண்மைகளைப் பேச அவர் தயங்கியது இல்லை.

திட்டி தீர்த்தவருக்கு பதிலடி :

இந்தப் பகிர்வு ஒருவரை விமர்சிக்க அல்ல. அவர் ஏன் இந்த நிலைக்கு ஆளானார் என்று விளங்கிக்கொள்ள. அவ்வளவுதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவின் கீழ் முகநூல் வாசி ஒருவர் ‘இளையராஜா அவர்களை புகழ்ந்த வாயால் அவரை தூற்றுகிறாயே இழிபிறவியே’ என்று கமன்ட் செய்து இருக்கிறார். இதற்க்கு பதில் ஜேம்ஸ் வசந்தன் ‘புகழ்ந்தது ஒரு இசைக்கலைஞனை. கண்டித்தது ஒரு சமூகக் கருத்தை. கல்வியறிவு இருந்தால் இதை விளங்கிக் கொள்ளமுடியும்.’ என்று கூலாக பதில் அளித்துள்ளார்.

Advertisement