ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது இவர் தானா.

0
148082
jappanil kalyana raman
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். அதோடு இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு இயக்கிய தமிழ்த் திரைப்படம் தான் “ஜப்பானில் கல்யாணராமன்”. இந்த படத்தில் கமலஹாசன், ராதா, சத்யராஜ், கவுண்டமணி, கோவை சரளா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படம் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘கல்யாணராமன்’ என்னும் படத்தின் தொடர்ச்சி கதை அம்சம் எனவும் தெரியவந்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கமலுடன் ஒரு குட்டிப் பையன் நடித்திருப்பார். அந்த குட்டிப் பையன் பெயர் தான் டிங்கு.

-விளம்பரம்-
tinku

இந்த குட்டிப் பையன் வேறு யாரும் இல்லை கோலங்கள், திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். மேலும், இந்த குட்டிப் பையன் டிங்கு நடிகர் போஸ் வெங்கட்டின் மச்சான் முறை ஆவார்.அருண் கதாபாத்திரத்தில் நடித்த டிங்கு 1978 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருக்கு தற்போது 39 வயதாகிறது. இவர் சினிமா துறையில் முதன் முதல் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். மேலும்,டிங்கு ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் அருண் கதாபாத்திரத்தில் நடித்தார். சினிமா துறையில் அதற்கு முன்னதாகவே ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்துள்ளார். அதற்குப் பிறகு விஜயகாந்தின் மாஸ் ஹிட் படமான ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால், இவ்வளவு படத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம் என்று பார்த்தால் அது ஜப்பானில் கல்யாணராமன் படம் தான். அதற்கு பிறகு டிங்கு படங்களில் நடிக்கவில்லை. மேலும், சிறு வயதில் பல படங்களில் நடித்தாலும், டீனேஜ் வயதில் அவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதோடு டிங்கு வழக்கம் போல எல்லாரும் செய்வதைப்போல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இதை தொடர்ந்து நடிகர் டிங்கு 2004 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை தேவயானி நடிப்பில் வந்த ‘கோலங்கள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் அர்ஜுன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். நம்ம டிங்கு அந்த சீரியலை தொடர்ந்து இவர் சஞ்சீவ் மற்றும் அபிதா நடித்த சூப்பர் ஹிட் சீரியலான ‘திருமதி செல்வம்’ சீரியலில் வாசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த வாசு கதாபாத்திரம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டது.

tinkku
timku

டிங்குக்கு நடிப்பு மட்டும் இல்லாமல் டான்ஸ் மீதும் அதிக ஆர்வம் உண்டு. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 2வில் பங்கேற்று தன்னுடைய டான்ஸ் திறனை காட்டி வந்தார். அதுமட்டும் இல்லாமல் அந்த சீசனின் டைட்டில் வின்னரும் ஆனார். இதை தொடர்ந்து இவர் சினிமா துறையில் சில படங்களுக்கு கூட டான்ஸ் கோரியோகிராபராக பணி புரிந்து இருக்கிறார். அதன் பின்னர் டிங்கு திருமணம் செய்து கொண்டார். பின் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். பின் கவிதா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மேலும்,டிங்கு தன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.அதோடு அமெரிக்காவில் நம்ம டிங்கு டான்ஸ் அகாடமி ஒன்று நடத்தி வருகிறாராம். மேலும், டிங்கு டான்ஸ் கோரியோகிராப் நிறுவனத்தை ஆரம்பித்து தற்போது வரை வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது என தெரியவந்தது.

-விளம்பரம்-
Advertisement