திடீரென நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு பட நடிகை கண்பார்வை இழந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி தற்போது நடிகராக நடித்துக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கிரிஷ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த படம் வானம். இந்த படத்தில் பரத், அனுஷ்கா, ஜாஸ்மின், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சந்தானம், சோனியா அகர்வால், விடிவி கணேஷ், ராதா ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஜாஸ்மின் பாசின்.
சிம்பு பட நடிகை ஜாஸ்மின் :
இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். ஆனால், இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்து இருந்தார். பின் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் இவர் டிவி சீரியல்கள், வெப்சீரிஸ், ஆல்பம் பாடல்கள் என்று பிசியாக நடித்து வருகிறார்.
கண் பார்வையை இழந்த காரணம் :
இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஜாஸ்மின் பாசின் கண் பார்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த ஜூலை 17-ஆம் தேதி இவர் டெல்லியில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது இவருடைய கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்டு இருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டிருந்தது.
மருத்துவர் சொன்னது:
இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து ராம்ப் வாக் செய்திருந்தார். அதற்குப் பிறகு இவருக்கு வலி அதிகமானது. ஒரு கட்டத்தில் அவரால் எதையுமே பார்க்க முடியாமல் போனது. இதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்கள் இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள்.
ஜாஸ்மின் பதிவு:
மேலும், இவரை பரிசோதித்த டாக்டர், இவருக்கு corneal பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். அதற்கு பிறகு இரண்டு கண்களுக்கு மேல் கட்டுப்போட்டு விட்டார்கள். தற்போது இவர் குணமடைந்து இருக்கிறார். இருந்தும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது அவருடைய கண் பார்வை சரியாக இருக்கிறது. இது தொடர்பாக ஜாஸ்மின் சோசியல் மீடியாவில் பகிர்ந்து நலமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.