தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கண்ணை நம்பாதே. இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய இயக்குனர் மாறன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் உதயநிதி அவர்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அவர் அந்த வீட்டின் உரிமையாளர் மகளையே காதலிக்கிறார். ஒருநாள் இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டின் உரிமையாளரும், காதலியின் தந்தைக்கு தெரிய வருகிறது. உடனடியாக அவர் உதநிதியை வீட்டை காலி செய்ய சொல்கிறார். இதனால் உதயநிதி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வீடு தேடி அலைகிறார். பின் இறுதியில் வாடைக்கு ஒரு வீட்டை கண்டுபிடிக்கிறார் உதயநிதி.

Advertisement

ஆனால், அந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா வசித்து வருகிறார். மேலும், அவர் ஓரிரு நாட்களில் காலி செய்து விடுவார் என்று தெரிய வருகிறது. இதனால் அந்த வீட்டிற்கு உதயநிதி குடியேறி கொள்கிறார். பின் ,பிரசன்னாவும் உதயநிதியின் நண்பரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது சாலையில் உதயநிதி ஒரு விபத்தை பார்க்கிறார். உடனடியாக அவர் அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்றதும் காரில் ஒரு பெண் நிறைய அடிபட்டு வாகனத்தை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்.பின் அந்த பெண்ணை உதயநிதி வீட்டில் இறக்கி விடுவதாக சொல்லி அழைத்துச் செல்கிறார்.

அந்தப் பெண் தன்னுடைய வீட்டில் இறங்கிக் கொண்டது மட்டுமில்லாமல் காரை உதயநிதியிடம் கொடுத்து காலையில் கொண்டு வாங்க உங்களுடைய உதவிக்கு நன்றி என்று சொல்கிறார். இதை எல்லாம் உதயநிதி தன்னுடைய நண்பர்களுடன் சொல்லி அடுத்த நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்த பெண்ணை அவர் வீட்டில் இறக்கி விட்டாரா அதே பெண் கார் உடைய பின்புறத்தில் சடலமாக இருக்கிறார். இது குறித்து அவர் பிரசன்னாவிடம் சொல்கிறார். இறுதியில் யார் அந்த பெண்? எப்படி அவர் இறந்தார்? காருக்குள் அந்த பெண்ணுடைய சடலத்தை போட்டது யார்? இதற்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே கண்ணை நம்பாதே படம்.

Advertisement

ஜெயலலிதா மருத்துவமனை காட்சி :

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக மாறிய பிறகு வெளியாகியிருக்கும் இந்த முதல் படத்தின் சிறப்பு காட்சி நேற்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது. இப்படியொரு நிலையில் இப்படத்தில் மறைந்த முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமாகிய ஜெ.ஜெயலலிதா காலமாவதற்கு முன்னர் அவர் மருத்துவமனையில் இருந்த ஒரு காட்சி படத்தில் இருந்துள்ளது. இதனால் இந்த காட்சி குறித்து “கண்ணை நம்பாதே” படத்தின் இயக்குனரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

Advertisement

இயக்குனர் விளக்கம் :

அதற்கு பதிலளித்த இயக்குனர் மாறன் கூறியதாவது “ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தது அனைவருக்குமே தெரியும். படத்தில் இருந்த அந்த காட்சி சர்ச்சைக்குரிய காட்சியாக இருந்தால் சென்சார் போர்டே அதனை நீக்கி இருப்பார்கள். தமிழ் நாட்டில் எந்த ஆட்சியாக இருந்திருந்தாலும் இந்த படத்தினை கண்டிப்பாக வெளியிட்டிருப்போம். அதோடு மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்தாலும் கூட அவரின் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன் என்று கூறினார் இயக்குனர் மாறன். இந்நிலையில் அந்த காட்சி குறித்து பல கருத்துகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக தொடங்கியுள்ளன.

Advertisement