அச்சு அசலாக கல்யாணியை சிறு வயதில் பார்த்தது போல இருக்கும் அவரின் மகள் – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
718
kalyani
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ மறக்க முடியாத குழந்தை நட்சத்திரங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர். தமிழில் நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான “ஜெயம்” படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூர்ணிதா. அந்த கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானதால் பின்னர் இவரது பூர்ணிதா என்ற பெயரை மறந்து கல்யாணி என்றே அழைக்கபட்டார்.

-விளம்பரம்-

ஜெயம் படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார் கல்யாணி. திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே சீரியலில் குழந்தை நடித்த இவர், பின்னர் சின்னத்திரையில் செட்டில் ஆன கல்யாணி விஜய் டிவியில் தொகுப்பாளியாகவும் பணியாற்றி வந்தார்.

இதையும் பாருங்க : வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் நடித்தது இந்த நடிகை தான் – இதோ படத்திற்காக நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வந்த கல்யாணி, கடந்த ஆண்டு சின்னத்திரையில் இருந்தும் விலகினார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறுகையில், அட்ஜெஸ்ட்மென்ட் செய்துகொள்ள கேட்டதால் தான் இந்த துறையில் இருந்தே விலகியதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. திருமணத்திற்கு பின்னர் பல வாய்ப்புகள் வந்தும் அதனை நிராகரித்துவிட்டார் கல்யாணி. மேலும், இவர் ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவ்யா என்ற மகளும் இருக்கிறார். அதிலும் அவரது மகள் இவரை சிறு வயதில் பார்த்தது போல இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement