தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பிரதர். இந்த படத்தை இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சீதா, பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர் பகுதியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஜெயம் ரவி சின்ன வயதிலிருந்தே சரியாகவும், குறும்புத்தனமாகவும், பாயிண்ட் பாயிண்டாக பேசுவார். இதனாலே அவருடைய அப்பா அவரை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார். பின் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி எல்லா இடத்திலுமே லா பாயிண்ட் பேச ஆரம்பிக்கிறார். இதனால் அவருடைய அப்பாவிற்கு நெஞ்சுவலி வருகிறது. இதற்கு மேல் நீ வீட்டில் இருக்காதே என்று அவரை எல்லோரும் திட்டுகிறார்கள்.
அப்போதுதான் ஜெயம் ரவியை அவருடைய அக்கா பூமிகா பார்த்து கொள்கிறார். அவனை ஒரு நல்ல பையனாக மாற்றுகிறேன். குடும்பத்தினர் உங்களுக்கு பிடித்த மாதிரி மாற்றுகிறேன் என்று சொல்லி அழைத்து செல்கிறார். அங்கேயும் அவர்களுடைய குடும்பம் பிரியும் அளவிற்கு ஜெயம் ரவி வேலை செய்கிறார். அதற்கு பின் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தில் ஜெயம் ரவி வழக்கம் போலத்தான் நடித்திருக்கிறாரே தவிர சொல்லி கொள்ளும் படியாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே ஏதோ நடிக்க வேண்டும் என்பதற்காக நடித்திருக்கிறார்கள். இயக்குனரும் எந்த ஒரு புதுவினமான முயற்சி செய்யவில்லை. அனுபவ நடிகர்களுமே தன்னுடைய எதார்த்த நடிப்பை கொடுக்காமல் செயற்கை தனமாகத்தான் நடித்திருப்பது போல இருக்கிறது.
பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தை தற்போது இருக்கும் ஜென்ரேஷனுக்கு ஏற்றவாறு இயக்குனர் எடுக்க முயற்சி செய்து இருக்கிறார் என்று தான் சொல்லணும். மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கதைக்களமும் இல்லை, காட்சிகளும் இல்லை. படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. ஆனால், சில காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
அதோடு மக்காமசி பாடல் தவிர வேறு எதுவுமே பார்வையாளர்கள் மத்தியில் ஒட்டவே இல்லை. ஜெயம் ரவியின் உடைய கதாபாத்திரமே சரியா? தவறா? என்ற குழப்பம் படம் முழுவதுமே இருக்கிறது. ஒளிப்பதிவு ஓகே, பின்னணி இசை ஓகே. ஆனால், அக்கா- தம்பி செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மற்றபடி படத்தில் ஒன்றுமில்லை. படம் ரொம்ப மொக்கையாக இருக்கிறது.
நிறை:
முதல் பாதியில் வரும் காமெடிகள் ஓகே
பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே
முதல் பாதி சுமாராக இருக்கிறது
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை
குறை:
கதைக்களமும் நன்றாக இல்லை.
அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் சொதப்பிவிட்டார்.
நடிகர்களுடைய நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது
படத்தில் சொல்லிக் கொள்ளும் சுவாரசியமும் விறுவிறுப்புமே இல்லை
மொத்தத்தில் பிரதர்- தாங்க முடியவில்லை
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.