முதன் முறையாக தனது குடும்ப பெண்களின் குரூப் புகைப்படத்தை பகிர்ந்த ஜெயம் ரவி.!

0
616
jayam ravi

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இதுவரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் ஜெயம் ரவி சினிமா பின்ணணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று அனைவரும் அறிந்ததே.

இவரை முதன் முதலில் இவரது அண்ணன் தான் ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். ஜெயம் ரவியின் தந்தை மோகன் ஒரு பிரபல திரைப்பட எடிட்டர் என்பதும், மோகனின் மனைவியின் பெயர் வரலக்ஷ்மி என்பதும் தெரியும்.

மேலும் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ஜெயம் ரவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் என்பது பல பேர் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் ரோஜா மோகன். அதே போல அவரது அக்காவின் புகைப்படத்தை பல பேர் பார்த்திட வாய்ப்பும் இல்லை.

ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது அம்மா, அக்கா,அண்ணி மமற்றும் மனைவி இருக்கும் ஒரு குடும்ப புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.