போலீசிடம் அடி வாங்கிய ஜெயம் ரவி பட பிரபல இசையமைப்பாளர்.!

0
894
Jayam-Ravi
- Advertisement -

சமீபத்தில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் ரஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘அடங்காமறு ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த கார்த்திக் தங்கவேல் இயக்க படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது
பேசிய இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ்
பட புரமோஷனுக்காக நான் ெவளியூர் சென்றதில்லை. இப்படத்துக்கு என்னை மதுரையில் ஒரு தியேட்டருக்கு இயக்குனர் அழைத்து சென்றார். அங்கு ரசிகர்கள் கூட்டத்தை கண்டு திணறிவிட்டேன். இயக்குனர் கார்த்திக் மேடை ஏறிவிட நான் கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன்

- Advertisement -

அப்போது போலீஸ்காரர் ஒருவர் எனக்கு ஒரு அடி கொடுத்து, தூரமாக செல்லும்படி கூறினார். நான் அடி வாங்குவதை இயக்குனர் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகுதான், அவர் இசை அமைப்பாளர், அவரை மேடைக்கு அனுப்புங்கள் என சொல்லி கூட்டத்திலிருந்து மீட்டார்’ என்றார்

இதுபற்றி இயக்குனர் கார்த்திக் தங்கவேல் கூறும்போது,’இசை அமைப்பாளர் ஒரு அடியாவது வாங்கட்டும் என்றுதான் கண்டுகொள்ளாமல் இருந்தேன். அதன்பிறகு அவர்தான் படத்தின் இசை அமைப்பாளர் என்று சொல்லி காப்பாற்றிவிட்டேன்’ என்று சிரித்தபடி பதில் அளித்தார்.

-விளம்பரம்-
Advertisement