தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தான் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.அதனை தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, நிமிர்ந்து நில், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.
பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படம்.
ஜெயம் ரவி திரைப்பயணம்:
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி அவர்கள் பொன்னியின் செல்வன் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
ஜெயம் ரவி நடித்து வரும் படங்கள்:
இதனை அடுத்து இறைவன், சைரன், அகிலன் போன்ற பல படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். மேலும் பொன்னியின் செல்வன் பாகம் 2டிலும் நடித்து வருகிறார். இப்படி ஜெயம் ரவி பல படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே இவர் நடித்திருக்கிறார். இதற்கு அவர் எல்லா கதைகளிலும் நடிக்க விருப்பமில்லை. தேர்ந்தெடுத்து சில கதைகளில் மட்டும் தான் நடித்து வருகிறேன் என்று கூறினார்.
ஜெயம் ரவி குடும்பம் :
இப்படியிருக்க ஜெயம் ரவியின் குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரையில் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் என்ற மூத்த மகனும் அயன் என்ற இளைய மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவியின் மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
ஆர்த்தி வெளியிட்ட புகைப்படங்கள் :
இந்த நிலையில் தான் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது வீட்டில் நடந்த பூஜையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஜெயம் ரவி பட்டு வேஷ்டியுடனும் அவரது மனைவி ஆர்த்தி பட்டு புடவையுடனும் இருக்கின்றனர். மேலும் ஜெயம் ரவி தன்னுடை மனைவியின் மாங்கல்யத்திற்கு குங்குமம் வைக்கிறார். அதே போல ஆர்த்தி பூஜை முடிந்தவுடன் தன்னுடைய கணவர் ஜெயம் ரவியின் கால்களை தொட்டு ஆசிர்வாதம் வாங்குகிறார்.
மேலும், அந்த புகைப்படத்தில் இவருக்கு இது தான் ரொம்பவும் முக்கியம் என்று பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த பூஜையில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டு நடிகர் ஜெயம் ரவியையும், ஆர்த்தியும் வாழ்த்தினார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.