இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் போன்றவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கிறது `2.0’திரைப்படம்.பிரமாண்ட பொருட்ச்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தின் பிரமாண்டத்தைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார் ஏற்று நடித்த ‘பக்ஷிராஜன்’ கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுத்தவர் யார் என்பதை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

Advertisement

ஒரு சிலருக்கு இந்த குரலை எங்கோ கேட்டிருக்கிறேன் என்ற எண்ணம் கண்டிப்பாக படம் பார்க்கும் போதும் ஓடிக்கொண்டிருக்கும்.அதற்கு விடையாக வந்தவர்தான் `பசங்க’, `நாடோடிகள்’ உள்ளிட்ட படங்களில் குணசித்திர கேரக்டரில் நடித்த ஜெயபிரகாஷ். `2.0′ படம் குறித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

ஷங்கர் சாருடன் இதுவரைக்கும் நான் வேலை பார்த்தது இல்லை. பொது நிகழ்ச்சியில் மட்டுமே அவரைப் பார்த்திருக்கேன். என்னைப் பார்த்தா நலம் விசாரிப்பார். அவ்வளவுதான். இந்தப் படத்துக்காக அவர் மைண்டில் நான் எப்படி வந்தேன்னுகூட தெரியல. ஒருநாள் அவருடைய துணை இயக்குநர் என்னை போனில் அழைத்து, ` `2.0′ படத்துல வர்ற ஒரு கேரக்டருக்கு நீங்க டப்பிங் பேச முடியுமா சார்’னு கேட்டார. நானும் ஓகே சொல்லிட்டு ஆடிஷன் போன்னேன். அது ஓகே ஆகா படத்தின் பணிகளை துவங்கினேன்.

Advertisement

இந்த முழுமையா டப்பிங் பேசி முடிக்க ரெண்டு வாரம் தேவைப்பட்டது. அந்த ரெண்டு வாரமுமே ஷங்கர் சார் கூடவே இருந்து மாடுலேஷன்களைச் சொல்லியும் கொடுத்தார், அதை நடித்தும் காட்டினார். வசனங்களை எல்லாம் அடி வயிற்றிலிருந்து பேசி டெலிவர் பண்ணுவார். ஷங்கர் சாரே பேசியிருந்தா படம் இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement