சினிமா துறைகளை பொறுத்த வரை நடிகர்களை விட நடிகைகளின் தற்கொலைதான் அதிகம் நிலவி உள்ளது சில்க் ஸ்மிதா தொடங்கி பல்வேறு நடிகைகள் தற்கொலை செய்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகையான ஜெயப்ரித்தாவும் தற்கொலைக்கு முயன்றதாக சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கூறியுள்ளார்.
80ஸ் காலகட்டங்களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட வெற்றிப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிப் படங்களில்
கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங் டயாலிஸ் செய்யவேண்டிய நிலைக்கு ஆளானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் சமூக வலை தளங்களில் பரவியது.
அந்த புகைப்படங்களை பார்த்து நடிகை ஜெயப்பிரித்தா கதறி அழுது தற்கொலைக்கு கூட முயன்றாராம். யாரும் உதவிக்கு வர முன் வராததால் வாழ்க்கையில் மிகவும் மனமுடைந்து அந்த முடிவுக்கு வந்ததாகவும் நடிகை ஜெயபிரித்தா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல்
சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அசாம் கான் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார். அவர் என் மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்தார் என்றும் பகிர் தகவலை கூறியுள்ளார் ஜெயபிரித்தா.