கமலால் சூப்பர் ஹிட் படத்தின் வாய்ப்பை இழந்துள்ள வாரிசு பட நடிகை ஜெயசுதா – அவரே சொன்ன காரணம்.

0
563
jayasudha
- Advertisement -

தென்னிந்தியா மற்றும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஜெயசுதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய பதினைந்து வயதில் தெலுங்கு மொழியில் வெளியான “பூமிகோசம்” என்ற படத்தில் மூன்று நிமிட நடனத்தை வெளிபடுத்தி சினிமா வாழக்கையை தொடங்கினார். அதற்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.

-விளம்பரம்-

இவர் இயக்குனர் கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான “மன்மதலீலை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதன் பிறகு முந்த “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இன்றைய சூப்பர் ஸ்டார் நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த மற்றும் கமலஹாசன் இணைத்த நடித்திருந்தனர். சமீபத்தி கூட தளபதி விஜய் நடித்திருந்த “வாரிசு” படத்தில் விஜய் அம்மாவாக நடித்திருந்தார். இப்படம் 300 கோடிக்கு மேலே வசூல் செய்துள்ளது. மேலும் நடிகை ஜெயசுதா சமீபத்தில் பாஜகவில் கட்சியில் இணைந்தார் எண்பதுக்கும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெயசுதா மலரும் நினைவுகள் :

இநிலையில் தான் நடிகை ஜெயசுதா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கடந்த 1983ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடித்து பல விருதுகளை தட்டிச்சென்ற “சலங்கை ஒலி” படத்தில் தான் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் “இயக்குனர் கே விஸ்வநாத் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த படத்தில் முதலில் நான் தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டேன். அதற்கு எனக்கு முன்தொகையும் கொடுத்துவிட்டார்.

ஆனால் நடிகர் கமலஹாசன் படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுக்க தாமதமான காரணத்தினால் படப்பிடிப்பு தாமதமாக தொடங்கியது. அப்படி இருக்கையில் நான் இயக்குனர் என்.டி.ராமராவ் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இதனால் என்னால் சலங்கை ஒலி படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே கே விஸ்வநாத் கொடுத்த முன்பணத்தை அவரிடமே திருப்பி கொடுத்தேன். படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் போட்டு முன்பணம் கொடுத்த பின் நான் அதனை திருப்பி கொடுத்தனால் கே. விஸ்வநாத் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. பல காலம் அந்த நிகழ்வால் என்னுடன் பேசாமல் இருந்தார்.

-விளம்பரம்-

இந்த காரணத்தினால் தான் “சலங்கை ஒலி” திரைப்படத்தில் என்னால் நடிக்காமல் போனது. அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் ஏனெற்றால் சலங்கை ஒலி திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக என்னுடைய சகோதரி ஜெயப்பிரதாதான் சரியாக இருந்தார். அந்த படத்தில் அவருடைய நடிப்பு அவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது என கூறினார் நடிகை ஜெயசுதா. கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான சலங்கை ஒலி திரைப்படம் தான் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 100 நாட்களுக்கு மேலே ஓடிய முதல் படமாகும் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement