திடீரென்று திருமணத்தை முடித்த 8 தோட்டாக்கள் ஜீவி பட நடிகர் வெற்றி – பெண் யார் தெரியுமா ?

0
216
vetri
- Advertisement -

யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக திகழ்பவர் வெற்றி. இவர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை எம் வெள்ளை பாண்டியன் தயாரித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து வெற்றி அவர்கள் ஜீவி என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பின் சின்ன இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் ஸ்ரீகந்தன் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த வனம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், அனுசித்தாரா, வேல ராமமூர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ரான் ஈதன் யோஹனன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் ஒரு தற்கொலையில் அமானுஷ்யங்களை புகுத்தி வித்தியாசமான கதையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

- Advertisement -

ஷிவானி நடிக்கும் படம்:

மேலும், இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. இப்படி நடிகர் வெற்றி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது இவர் பிக் பாஸ் பிரபலம் சிவானி நடிக்கும் பம்பர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவானி. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் நடத்தி இருக்கிறார்.

வெற்றி நடிக்கும் பம்பர் படம்:

இதனிடையே ஆர் ஜே பாலாஜி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ஷிவானி கதாநாயகியாக பம்பர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் வெற்றி நடிக்கிறார். கேரள மாநில லாட்டரியை வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

-விளம்பரம்-

நடிகர் வெற்றியின் திருமண புகைப்படம்:

இப்படி ஒரு நிலையில் நடிகர் வெற்றியின் திருமண புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் வெற்றி அவர்கள் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமணம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெற்றி பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஹரீஷ் உத்தமன் திருமணம் இரண்டாவது திருமணம்:

இதேபோல் இன்று நடிகர் ஹரீஷ் உத்தமன் திருமணம் செய்திருக்கிறார். இவர் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர். இவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடந்து விவாகரத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவதாக மலையாள நடிகையை கரம் பிடித்து இருக்கிறார். இவர்களுடைய திருமணமும் யாருக்கும் தெரியாமல் மாவேலிக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement