பெருமூச்சு விடுகிற இடத்திற்கு வந்தாலும், கனெக்ட் ஆகுது – ‘குடும்பஸ்தன்’ குறித்து ஜென்சன் பேட்டி

0
201
- Advertisement -

சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகர் ஜென்ஷன் திவாகரின் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்லா வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்தில் மணிகண்டனோடு இணைந்து ‘நக்கலைட்ஸ்’ குழுவின் ஜென்ஷனும், பிரசன்னாவும் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களின் காமெடிக்கு தற்போது தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது‌. ‌ இதில் ஜென்ஷன் ஏற்கனவே ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜென்ஷன், ‘குடும்பஸ்தன்’ படத்தை பார்த்துட்டு எல்லாருமே பாசிட்டிவா சொல்றாங்க. படத்துக்கு கிடைக்கிற விமர்சனங்கள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. நம்ம கொடுத்த உழைப்புக்கு மக்களோடு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

ஜென்ஷன் பேட்டி:

மேலும், குடும்பஸ்தன் படத்துக்காக நான் 30 நாள்கள் சூட்டிங் போனேன். அந்த முப்பது நாட்களும் என் வாழ்க்கையில மறக்கவே முடியாது. இந்தப் படம் ஒரு மிடில் கிளாஸ் ஓட வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிற நிறைய மிடில் கிளாஸ் ஆட்கள் இருக்காங்க. அதனால தான் ‘குடும்பஸ்தன்’ அனைவருக்கும் கனெக்ட் ஆகுது. நானும் அந்த படத்தில் வர நவீன் மாதிரி தான். கடன் வாங்கிட்டு கணக்கு பாக்குற விஷயங்கள் எல்லாம் இன்னமும் நான் சந்திச்சுக்கிட்டு தான் இருக்கிறேன்.

குடும்பஸ்தன் குறித்து:

மேலும், இந்த படத்தில் எனக்கு தெரிந்த ஆட்கள் சுத்தி இருந்ததால காமெடி சுலபமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால், எல்லா வேலைகளும் ஈசியாக முடியல. படம் என்றாலே சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அந்த மாதிரி நிறைய சிக்கல்கள் இந்த படத்திற்கும் இருந்தது. ஆனால், இந்த படத்தை எடுக்க தயாரிப்பாளர் ரொம்ப உறுதுணையாக இந்தாங்க. மேலும், நான் ‘நக்கலைட்ஸ்’ டீம்ல கொஞ்ச நாள் இல்ல. இயக்குனர் ராஜேஸ்வர் இந்த கதையை என்கிட்ட சொல்லும் போது நான் ‘மஞ்ச நோட்டீஸ்’ சேனல்ல வீடியோக்கள் பண்ணிட்டு இருந்தேன். அதனால் நாங்கள் மறுபடியும் ரியூனியன் ஆவதற்கு இந்தப் படம் ‘குடும்பஸ்தன்’ தான் காரணம்.

-விளம்பரம்-

குடிகாரன் கதாபாத்திரத்தில் நடிப்பது:

பின், நான் குகுடிகாரன் கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் கடைசி. இதுக்கப்புறம் இந்த மாதிரி வராது. தொடர்ந்து என்னுடைய 5 படங்கள் வெளியாக இருக்கிறது. இந்த ஐந்து படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தான். அதே மாதிரி, சிலர் என்கிட்ட ‘லவ்வர் பந்து’ தான் உங்களுடைய முதல் படமான்னு கேக்குறாங்க. நான் இதுவரைக்கும் பண்ணதே இரண்டு படம்தான் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். என்னை அவங்க அடையாளப்படுத்துற முதல் திரைப்படம் ‘லப்பர் பந்து’ படத்துல குடிகாரன் கேரக்டர்ல நடிச்சிருக்கேன் என்றுதான்.

லப்பர் பந்து குறித்து:

மேலும், ‘என் மாப்பிள்ளை எப்பவும் முதல் பந்தை சாமிக்கு விட்டுடுவான்’ என்று நான் பேசிய வசனம் சமூக வலைத்தளப் பக்கங்களில் பயங்கர வைரலாகி, மீம்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு. கண்டிப்பாக அது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி தான். நான் அதில் வெறும் கருவி. சினிமாவில் என்னுடைய பயணத்தை உறுதிப்படுத்துகிற படமாக ‘லப்பர் பந்து’ அமைந்தது. சினிமா என்பது நிலையானது கிடையாது. ஆனால், ‘லப்பர் பந்து’ திரைப்படம் அதை நிலையாக மாத்திடுச்சு. என்னை பொருளாதார ரீதியாக அந்த படம் ஒரு படி மேல் ஏத்திவிட்டிருக்கு. என்னுடைய குடும்பத்துக்கு நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கு என்று ஜென்ஷன் பேட்டியில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement