இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் அதிகமாக கிளின்ட் ஈஸ்ட்வுட் அடிபட்டுக் கொண்டிருந்தது. இதனை அடுத்து ரசிகர்களும் யார் இந்த கிளின்ட் ஈஸ்ட்வுட் என்று சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் கிளின்ட் ஈஸ்ட்வுட் பற்றி பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

Advertisement

சினிமா உலகில் பல சாதனைகளை படைத்து தனக்கென ஒரு ரசிகர் முத்திரையை பதித்திருப்பவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் கௌபாய் கெட்டப்பை முதன் முதலில் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் இவர் தான். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தில் லியோ தாஸ் கதாபாத்திரத்தில் விஜய் ஒரு ரிவால்வர் சுற்றுவார். அந்த அக்மார்க் ஸ்டைலுக்கு உண்மையான சொந்தக்காரர் கிளின்ட் ஈஸ்ட்வுட் தான். இவர் 1951 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார்.

பின் கொரியன் போரில் அமெரிக்க ராணுவத்தில் இருந்து முக்கிய பங்காற்றி இருந்தார். ஈஸ்ட்வுட் ஒருமுறை போர் விமானத்தில் சிக்கி சாவின் விளிம்பு வரை சென்று வந்தார். இப்படி ராணுவத்தில் பல சாகசங்களை கிளின்ட் ஈஸ்ட்வுட் செய்திருக்கிறார். மேலும், இவர் ராணுவ அதிகாரியாக இருந்தபோது ஆர்ட் கோட்டையில் யுனிவர்சல் ஸ்டுடியோவில் இருந்து வந்த கேமரா குழு படப்பிடிப்பை எடுத்து இருக்கிறது. அந்த சமயத்தில் தான் கிளின்ட் ஈஸ்ட்வுட்க்கு சினிமாவின் மீது ஈர்ப்பு இருக்கிறது. அப்போதுதான் சக் ஹில் என்பவர் ஈஸ்ட்வுட்டிம் சினிமாவை குறித்து பேசி இருக்கிறார்.

Advertisement

அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. முதலில் இவரின் உருவத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்து வாய்ப்பு தராமல் நிராகரித்து விட்டார்கள். பின் இவர் டிராமா வகுப்புகளுக்கு சென்று நடிப்பை கற்றும் கொண்டார். மேலும், இவர் நிறைய அவமானங்களை சந்தித்து இருந்தார். இருந்தாலும் அவமானங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஆடிஷனைகள் சென்றிருந்தார். அதற்கு பிறகு தான் தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தார்.

Advertisement

அப்படி அமைந்த அவருடைய வாய்ப்பு தான் `ராவைட்’ (Rawhide) என்ற தொலைக்காட்சி தொடர். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பேரும் கிடைத்தது. அதற்குப் பிறகு இவர் இத்தாலிய இயக்குனர் செர்ஜியோ இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதற்கு இடையில் இவர் சில தோல்விகளை சந்தித்தாலும் விடாமுயற்சியுடன் படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். தற்போது 93 வயதிலும் ஹாலிவுட் பரபரப்பாக இயங்கி வருகிறார். சினிமா என்பதை தாண்டி இவர் அரசியலிலும் பங்கெடுத்து வருகிறார். அந்த வகையில் 1986, 2001 ஆகிய வருடங்களில் அமெரிக்காவில் மேயராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.இன்றைய இளம் இயக்குனர், நடிகர்களுக்கு இவர் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம்.

Advertisement