போட்டோகிராப்பி, கோலங்கள் சீரியலில் செய்த வேலை – ஜிகிர்தண்டா முதல் மகான் வரை பல படங்களில் நடித்த நடிகர் பற்றிய அறிந்திராத பக்கங்கள்.

0
491
ramachandiran
- Advertisement -

பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் சில நடிகர்கள் பிரபலம் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ராமச்சந்திரன் துரைராஜ். இவர் இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், உதவி இயக்குனர் என பன்முக கொண்டிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த கோலங்கள் சீரியலில் உதவி இயக்குனராக ராமச்சந்திரன் பணியாற்றி இருந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

மேலும், இவர் 2010 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த நான் மகான் அல்ல படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ராமச்சந்திரன் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் சதுரங்கவேட்டை, ஜிகிர்தண்டா, இன்று நேற்று நாளை, வில்லம்பு, இறைவி, திருநாள்,அறம், சூரரைப்போற்று போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் படங்களில் கேங் லீடர், அரசியல்வாதி, வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ராமச்சந்திரன் துரைராஜ் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவருடைய நடிப்பு ஒரு பக்கம் என்றாலும் அவருடைய குரலும் மக்கள் மத்தியில் பிரபலம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கரகரவென்ற குரலில் பேசுவார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருந்த மகான் படத்திலும் ராமச்சந்திரன் நடித்து இருந்தார். இப்படி பல படங்களில் இவர் நடித்து இருந்தாலும் இவருடைய பெயர் பல பேருக்கு தெரியாது. அதுமட்டும் இல்லாமல் இவருக்கான அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர் ராமச்சந்திரன் துரைராஜ் அளித்த பேட்டி :

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராமச்சந்திரன் துரைராஜ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் திரைப்பயணம் குறித்து கூறியிருப்பது, கம்பம் பக்கத்தில் கோம்பை தான் சொந்த ஊர். படித்து முடித்துவிட்டு நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு வேலைக்காக தான் நான் சென்னைக்கு வந்தேன். அப்பதான் எனக்கு போட்டோகிராப் ஹாபியாக இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடினேன். பின் நான் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

பெயர் கூட பல பேருக்கு தெரியாது:

கோலங்கள் சீரியலில் கூட உதவி இயக்குனராக இருந்தேன். தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைத்தது. அப்படியே படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நடிக்கணும் என்ற ஆசை வந்தவுடனே எந்த கதாபாத்திரம் இருந்தாலும் நடிக்க செய்தேன். 22 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். 2008ல் சினிமாவில் நுழைந்தேன். ஆனால், நான் பல படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய பெயர் பலருக்கும் தெரியாது. படங்களில் பணிபுரிந்தவர்கள், பார்த்தவர்கள் கூட உங்களுடைய பெயர் தெரியாது சொல்லுங்கள் என்று சொல்லும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

சினிமாவில் அங்கீகாரம்:

நான் சின்ன வயதில் இருந்தே ரஜினி சாரோட ரசிகன். அவருடைய படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. அவருடைய படத்தில் நடித்ததை என்னால் மறக்க முடியாது. மேலும், எனக்கு சினிமாவில் ஓரளவு தான் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், பல பேருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை நினைத்தால் சரி ஓகே என்று தோணும். தற்போது நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். கூடிய விரைவில் அந்த படங்கள் எல்லாம் ரிலீசாகிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement