ஜிப்ஸி விமர்சனத்தில் வரம்பை மீறிய ப்ளூ சட்டை மாறன். ஜீவா செய்த கமன்ட். அடடடா இந்த மனுஷனை போய்.

0
132382
gypsy
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இந்த விமர்சனம் மூலமாக அதிக அளவு பிரபலமாகி தன்னுடைய கனவு நினைவாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் அவருடைய பட விமர்சனங்கள் அதிக அளவில் மாஸ் கொடுத்தன.

- Advertisement -

இதையும் பாருங்க : அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் – தம்பியின் தற்கொலையில் ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அவ்வளவு ஏன் இவரது விமர்சனங்களை பார்த்து பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று பலரும் கடுப்பில் தான் இருந்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக இவரது விமர்சனங்கள் தனிமனித விமர்சனங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி இருந்த ஜிப்ஸி படத்தை ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றினார். அதிலும் அவன் இவன், குதிரை காரன் என்றெல்லாம் ஏக வசனம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்தை சில ரசித்தாலும் பெரும்பாலானோர் இவரது பேச்சை கண்டித்து வந்தனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தைய் கண்டு ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் ரியாக்ட் செய்துள்ளார். தற்போது ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிப்ஸி என்று பெயர் மாற்றியுள்ளார். அதில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை பார்த்து நடிகர் ஜீவா ‘அட பாவி ‘ என்று கமன்ட் செய்துள்ளார். ஜீவாவின் இந்த எதார்த்தமான ஸ்போர்ட்டிவான குணம் பலரையும் கவர்ந்துள்ளது.

Advertisement