ஜோடியில் ஆடிய நேத்ரன் மகளா இது. இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

0
99395
- Advertisement -

சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நேத்ரன். இவன் சின்னத்திரை சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார். இவர் முதன் முதலாக மருதாணி என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்து உள்ளார். இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து உள்ளார். இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று உள்ளார்.

-விளம்பரம்-

சூப்பர் குடும்பம், ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவர் தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தீபாவும் சின்னத்திரையில் பிரபலமான நடிகை. இவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் பல சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

- Advertisement -

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நம்பர் 1 சீசன் 5 என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயாவும் கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து பல பாடல்களுக்கு நடனம் ஆடி இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் அவருடைய மகள் சின்னப் பெண்ணாக இருந்தார். தற்போது இவரின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நேத்ரன் மகள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்து விட்டாரா!! என்று கேட்டு வருகிறார்கள். மூத்த மகள் அபிநயா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டு இருக்கிறார். இரண்டாவது மகள் அஞ்சனா பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநயா தற்போது தன்னுடைய கல்லுரிப் படிப்பு படித்து கொண்டு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement