அனிருத்தை திருமணம் செய்துகொள்வேன் – பிரபல இளம் பாடகி ஓபன் (நீங்க நினைக்கிறவங்க தான்)

0
1196
anirudh
- Advertisement -

அனிருத்தை தான் திருமணம் செய்துகொள்ளுவேன் என்று சொன்ன பின்னணி பாடகி குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். அதோடு சமீபத்தில் வெளியாகி இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படத்தில் அனிரூத் உடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதையும் பாருங்க : நாங்கெல்லாம் என்ன பைத்தியக்காரனா ? அலுவகத்தில் புகுந்து தடாலடி காட்டிய நாஞ்சில் விஜயன். போலீஸ் ஜீப்பை மறித்து வாக்குவாதம்.

- Advertisement -

அனிரூத் இசை அமைத்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து அவர் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதேபோல் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் அனிரூத் இசை அமைத்து இருந்தார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதிலும் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது.

அனிரூத் இசை அமைக்கும் படங்கள்:

சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. தற்போது அனிருத் அவர்கள் சியான் 60, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம், தலைவர் 169 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் இசையமைப்பது மட்டும் இல்லாமல் பாடல் பாடுவது,

-விளம்பரம்-

அனிருத் திருமணம்:

இசை ஆல்பங்களில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில்கூட பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை, அனிருத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறி இருந்தார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இளம் பின்னணி பாடகி அனிரூத்தை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அனிரூத்தை திருணம் செய்யும் பின்னணி பாடகி:

அதாவது இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்தார். அப்போது அவரிடம் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதில் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், இந்த மூவரில் அனிரூத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை. அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அனிருத்தும் ஜோனிட காந்தி இருவரும் சேர்ந்து ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement