நாங்கெல்லாம் என்ன பைத்தியக்காரனா ? அலுவகத்தில் புகுந்து தடாலடி காட்டிய நாஞ்சில் விஜயன். போலீஸ் ஜீப்பை மறித்து வாக்குவாதம்.

0
551
nanjil
- Advertisement -

டிராவல்ஸ் ஏஜென்சிகு அழைப்புக் கொடுத்தும் சரியான பதில் அளிக்காததால் கோபமடைந்த நாஞ்சில் விஜயன் நடுரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன்.

-விளம்பரம்-
Nanjil-vijayan

பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நாஞ்சில் விஜயன் சின்னத்திரை பயணம்:

இந்த சீரியலின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று வருகிறார். வத்திக்குச்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நாஞ்சில் விஜயன் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. இப்படி சின்னத்திரையில் படு பிசியாக கலக்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயன் சமீபத்தில் புது கார் ஒன்று வாங்கி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துக்களை கூறி லைக்குகளை குவித்து இருந்தார்கள்.

நாஞ்சில் விஜயன் பதிவிட்ட வீடியோ:

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் வீடியோ ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அது என்னவென்றால், நாஞ்சில் விஜயன் அவர்கள் பல்லாவரத்தில் ட்ராவல்ஸில் பஸ் புக் செய்து காத்திருந்தார். இரண்டு மணி நேரம் ஆகியும் டிராவல்ஸில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனை எடுத்து டிராவல்ஸ் நிலையத்திற்கே நாஞ்சில் விஜயன் சென்று இருக்கிறார். அங்கு அவர், கஸ்டமரை பார்த்தால் பைத்தியக்காரனா! தெரிகிறதா? வண்டி பிரேக் டவுன் ஆகி விட்டது என்றால் போன் பண்ணி சொல்லணும் .

-விளம்பரம்-

போலீசில் நாஞ்சில் விஜயன் புகார் அளித்த காரணம்:

அப்படி இல்லை என்றால் நாங்கள் போன் பண்ணாலும் எடுத்து என்ன நிலவரம் என்று சொல்ல வேண்டும். இரண்டு மணி நேரம் நாங்கள் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறோம். ஊருக்கு நாங்கள் எப்படி செல்வது? நாளைக்கு ஒரு ஆபரேஷன் ரொம்ப எமர்ஜென்சி. அதற்காகத்தான் நான் கிளம்பினேன். இப்ப நான் எப்படி அந்த இடத்திற்குப் போவது? எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தெனாவட்டாக இருந்தால் என்ன அர்த்தம்? இதே பெண்களுக்கு இந்த ஒரு நிலைமை என்றால் என்ன செய்வது? பிரேக் டவுன் நடப்பது சாதாரண விஷயம்.

ட்ரான்ஸ் ஏஜென்ஜில் பிரச்சனை:

இதை நான் குறை சொல்லவில்லை. ஆனால், தகவலை அளிக்க வேண்டியது உங்களுடைய கடமை. உடனடியாக இதற்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். போலீசை வரச்சொல்லுங்கள், மேனேஜரை கூப்பிடுங்கள் என்று நாஞ்சில் விஜயன் பேசி இருக்கிறார். பின்பு போலீசிடம் இந்த சம்பவம் குறித்து கூறி இருக்கிறார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்த பிரச்சினையை பேசி முடித்து நாஞ்சில் விஜயன் உடைய பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் நாஞ்சில் விஜயன் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement