தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த மனிதர்கள் இருப்பது தான் மிகவும் குறைவு. இதுவரை எத்தனையோ நடிகர்கள் பல்வேறு விடயத்தில் கிசுகிசுக்கப்பட்டுள்ளனர். ஆனால், விஜயகாந்த் இதுவரை எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்கபடாதவர்.
அரசியலில் ஈடுபட்ட பிறகு பல்வேறு அரசியல் வாதிகளையும் நேரடியாக எதிர்த்தவர் விஜயகாந்த். ஆனால், சமீப காலமாக அவரை வைத்து பல மீம்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. பின்னர் அவரது நல்ல குணமறிந்து அதனை எல்லாம் நிறுத்தி விட்டனர்.
பக்கத்து மாநிலமாக இருந்தாலும் கஷ்டம் என்று வந்துவிட்டால் ஓடோடி சென்று உதவி செய்பவர் நமது கேப்டன். கேரள வெள்ளம் துவங்கி கஜா புயல் வரை குறுகிய காலத்தில் பல உதவிகளை செய்தவர். இந்நிலையில் அஜித்தும் அதுபோல தான் என்று பிரபல நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை குறித்து ஒரு மருத்துவமனை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசு ஜோதிகா, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் விஜயகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். அவர்கள் செய்யும் உதவிகள் பல யாருக்கும் தெரியாது. இருவரும் அதை விளம்பரம் என்ன அந்த விஷயம் குறித்து பேச கூட மாட்டார்கள் என்று பேசியுள்ளார்