‘கேமராவ இப்படி வைங்க’ – தேவர்மகனில் திட்டிய பிசி ஸ்ரீராமை வளர்ந்து வன்மத்தை தீர்த்த வடிவேலு

0
280
- Advertisement -

காமெடி நடிகர் வடிவேலு மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இடையே நடந்த சண்டை குறித்து பத்திரிக்கையாளர் ராஜகம்பீரன் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவானாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இவரை ராஜ்கிரண் தான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும் இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் படத்தில் காமெடியராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான ராஜகம்பீரன் வடிவேலு குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘ராஜ்கிரண் அலுவலகத்தில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் வடிவேலு. பிறகுதான் ராஜ்கிரண் வடிவேலுவை தன்னுடைய திரைப்படங்களில் நடிக்க வைத்தார்.

- Advertisement -

பத்திரிக்கையாளர் ராஜகம்பீரன் பேட்டி:

மேலும், ராஜ்கிரணுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் தான் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து. அப்படிதான் சிங்கமுத்து வடிவேலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த பொதுதான் அவருக்கு வெளிப்படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்தன. அப்படி வந்த வாய்ப்புகள் தான் சின்ன கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள். இப்படி தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தவுடன் வடிவேலு தனக்கென ஒரு குழுவை செட் செய்தார். அந்தக் குழு தான் அவருக்கு சினிமாவால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி சம்பளம் பேச வேண்டும் என்று எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது.

தேவர்மகன் சுவாரஸ்யமான சம்பவம்:

‍’ தேவர் மகன்’ படத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அது படம் முழுக்க முழுக்க கிராமத்தை மயமாக எடுக்கப்பட்ட படம் என்பதால் நிறைய வைடு ஷாட்கள் இருக்கும்‌. வைடு ஷாட் என்பதால் அத்தனை பேரையும் ஒழுங்காக செட் செய்த பின்னால்தான் கேமராவை வைக்க முடியும். அப்படி ஒவ்வொரு முறை வைத்து எடுக்கும் பொழுது, ஒருவர் அங்கும் இங்கும் குறுக்கே சென்று கொண்டே இருந்தார். அவர்தான் வடிவேலு. அதைப் பார்த்த பிசி ஸ்ரீராம், கடுப்பில் பயங்கரமாக வடிவேலுவை திட்டினார்.

-விளம்பரம்-

வடிவேலு செய்த விஷயம்:

ஏனென்றால், அது அவர் வளர்ந்து வந்த காலம். ஆனால் பின்னாளில் வடிவேலு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தார். படங்களில், காமெடி காட்சிகளை அவரே இயக்கும் அளவிற்கு அவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது அப்படி ஒரு படத்தில் வடிவேல் நடிக்க பிசி ஸ்ரீராம் அந்தப் படத்திற்கு கேமராமேன் ஆக இருந்தார். அப்போது வடிவேலு பிசி ஸ்ரீராமிடம் நான் எப்படி காட்சியை சொல்கிறேனோ, அதற்கு ஏற்றபடி கேமராவை வையுங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பி சி ஸ்ரீராம் அதைப்பற்றி எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

வடிவேலு செய்த துரோகம்:

ஏனென்றால், பிசி ஸ்ரீராம் எப்பொழுதுமே மற்றவர்களின் வளர்ச்சியை வாஞ்சையோடு பார்ப்பவர். அந்த அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட வடிவேலு, தன்னுடைய குழுவிற்கு ஒரு விஷயத்தை செய்ய மறந்து விட்டார். அது என்னவென்றால் முதலில் வடிவேலுவுடன் இணைந்து வந்த அந்த குழுவிற்கு 10,000 சம்பளம் பேசப்பட்டது. ஆனால், பின்னாளில் வடிவேலு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு, ஒரு நாளைக்கு பத்து லட்சம் வரை சம்பளம் வாங்கினார். ஆனால், அந்த குழுவுக்கு கடைசி வரை சம்பளத்தை உயர்த்தி கொடுக்கவே இல்லை. அதனால்தான் தற்போது கடுப்பில் ஒவ்வொருவரும் வடிவேலுவை பற்றி சேனல் சேனலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement