நடிகர் லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் புது சீரியல், எந்த சேனல் தெரியுமா? வெளியான அப்டேட்

0
399
- Advertisement -

ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் குறித்து அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்களின் மதியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலுமே வித்தியாசமான கதைகளுடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியலுக்கு பெயர் போன சேனல்களாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் திகழ்கிறது.

-விளம்பரம்-

இந்த மூன்று சேனல்களில் சீரியல்கள் மட்டும் இல்லாமல் ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சேனல் சீரியல்களுக்கு இடையே தான் டிஆர்பி ரேட்டிங் மோதல் அதிகம் நடைபெறுகிறது. அது மட்டும் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க புது புது சீரியல்களையும், வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். சில மாதங்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவியில் நிறைய தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாகவும், புது சீரியல்கள் வர போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஜீ தமிழ் புது சீரியல்:

இந்த நிலையில் ஜீ தமிழில் புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜீ தமிழில் மௌன பேசியதே என்ற புது தொடர் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரை மகிழ் மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தொடரை தயாரித்து இருந்தது. மேலும், இந்த புது தொடரின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

சீரியல் குறித்த அப்டேட்:

மேலும், இந்த தொடரில் கதாநாயகனாக ஜோவிதா லிவிஸ்டன் நடிக்க இருக்கிறார். கூடிய விரைவில் இந்த தொடர் குறித்த விவரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து லைக்ஸ் குவித்து வருகிறார்கள். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஜோவிதா லிவிங்ஸ்டன்.

-விளம்பரம்-

ஜோவிதா குறித்த தகவல்:

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதோடு தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான லிவிங்ஸ்டன் மகள் தான் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் முதலில் கலாசல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

ஜோவிதா நடித்த சீரியல்:

இதன் பின்னர் தான் இவர் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடர் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது. இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அருவி என்ற தொடரில் ஹீரோயினியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது.

Advertisement