உலக அதிசியம்.! முதன் முறையாக ஜூலியின் பதிவிற்கு குவியுது பாராட்டு.!

0
573

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர் . ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி.

அதேபோல அவரது ஹெட்டர்ஸ்களும் குறைந்தபாடில்லை. இவர், என்ன பதிவிட்டாலும் அதனை கலாப்பதற்கு என்று ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜூலி சமீபத்தில் ‘நான் என்ன தவறு செய்தேன் எதற்காக இப்படி திட்டுகிறீர்கள்’ என்று ஒரு வீடியோ ஒன்றை கூட வெளியிட்டு இருந்தா.ர் அந்த வீடியோ சமூக வளையதலத்தில் வைரலாக பரவியது.

அந்த வீடியோவிற்கு பின்னர் ஜூலியை திட்டி வந்த கூட்டம் கொஞ்சம் குறைந்தது போலத்தான் தோன்றுகிறது. அதற்கு சான்றாக சமீபத்தில் ஜூலி ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வழக்கமாக ஜூலி எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதில் பலரும் திட்டி தீர்க்கும்கமன்ட்கள் தான் இருக்கும். ஆனால், இந்த புகைப்படத்திற்கு பலரும் நல்லபடியாகவே சமன் செய்து வருகின்றனர்.