தோழியுடன் நெருக்கம், உதவி இயக்குனரை தாக்கிய ஜோதிகா பட இயக்குனர்.!

0
250
Jyothika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த ஜோதிகா 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி படமாக அமைந்தது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ திரைபடம்.

ரோஷன் :

Image result for malayalam director roshan andrews

இந்த படத்தை மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூ என்பவர் இயக்கினார். மலையாள திரையுலகில், முன்னணி இயக்குனராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. ‘காயங்குளம்’,  ‘மும்பை போலீஸ்’, ‘உதயநானுதாரம்’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், மலையாள தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி என்பவர் காவல் நிலையத்தில் ரோஷன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,
கிட்டத்தட்ட 30க்கும் மேபட்ட அடியாட்களுடன் வீட்டிற்குள் வந்து எங்களை தாக்கினார்கள். எனது அம்மாவை கீழே தள்ளிவிட்டனர். ரோஷன் ஆண்ட்ரூவின் தோழி ஒருவருடன் நான் நெருங்கி பழகியது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் எங்களை தாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்வினின் இந்த குற்றச்சாட்டை மறுத்த ரோஷன் கூறுகையில் , என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ஆண்டனிக்கு போதைப் பழக்கம் இருந்தது. இதனால் அவரை நீக்கினேன். அதன் பிறகு என்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பினார். இதை தட்டி கேட்க சென்ற போது என்னையும் எனது நண்பர்களையும் ஜான் ஆன்டனி, அவரது தந்தை மற்றும்  கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர் என்று கூறினார்.