புடவை, ஹீல்ஸ் அணிந்து இதை செஞ்சாங்க. ஜோதிகாவின் வீடீயோவை கண்டு வியந்த டிடி.

0
34418
jothika-Dd
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90 கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஜோதிகா அவர்கள் முதன் முதலாக சினிமா துறைக்குள் ஹிந்தி படத்தின் மூலம் தான் என்ட்ரி கொடுத்தார். ஜோதிகா குடும்பமே ஒரு கலை குடும்பம் என்று சொல்லலாம். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்தார். இவர் தமிழில் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பூவெல்லாம் கேட்டுப்பார், சினேகிதியே,குஷி, டும் டும் டும், பூவெல்லாம் உன் டும் தூள், காக்க காக்க, திருமலை, பேரழகன், சந்திரமுகி, அருள், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். மேலும், நடிகை ஜோதிகா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவரது சிறப்பான நடிப்பிற்கு இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து உள்ளது. நடிகை ஜோதிகா அவர்கள் நடிகர் சூர்யாவுடன் 7 படத்திற்கு மேல் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்து உள்ளார்.

- Advertisement -

பின் அவர்கள் இருவரும் காதலித்து 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும்,தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள். ஜோதிகா அவர்கள் திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள மொழி படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு 36 வயதினிலே என்ற தலைப்பும் வைத்தார்கள்.

ஜோதிகா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து ஜோதிகா அவர்கள் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, செக்க-சிவந்த-வானம், ஜாக்பாட், தம்பி என பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவரப்போகிறது. நடிகை ஜோதிகா அவர்கள் திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று சொல்லலாம். இந்நிலையில் நடிகை ஜோதிகா அவர்கள் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். பெரும்பாலும் ஜோதிகா அவர்கள் விழாவிற்கு புடவையில் தான் அணிந்து வருகிறார். அப்போது ஜோதிகா அவர்கள் கையில் ஒரு கம்பு கொடுக்கப்பட்டது. ஜோதிகா புடவையில் அதுவும் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு கம்பு சுற்றும் காட்சி செம மாஸ் என்று சொல்லலாம்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் புடவை கட்டிக்கொண்டு ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு கம்பு சுற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை. நிஜமாகவே ஜோதிகா வேற லெவல் என்று தங்களுடைய கமெண்ட்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த வீடியோவை தொகுப்பாளினி டிடி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement