சர்ச்சைக்கு உள்ளான ஜோதிகாவின் பேச்சு. திருப்பதிக்கு வைத்திருந்த பணத்தை ஆசிரியர் என்ன செய்தார் பாருங்க.

0
3721
Jyothika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான ஹீரோயினியாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்தியவில் உள்ள பல மொழிகளில் கொடி கட்டி பறந்தார். பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த விருது விழாவில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகை ஜோதிகா அவர்கள் தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக எழுப்பியது.

-விளம்பரம்-

அந்த விழாவில் ஜோதிகா அவர்கள் கூறியது, எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் மேம்படுத்த உதவுங்கள் என்று பேசியிருந்தார்.

இதையும் பாருங்க : வேற யாரையாவது நடிக்க வச்சிருக்கலாம்- சுறா படத்தின் தோல்வி குறித்து முதன் முறையாக பேசிய இயக்குனர்.

- Advertisement -

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அதுமட்டுமில்லாமல் கோயில்களை பற்றி தவறாக பேசிய ஜோதிகா இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு பலர் விமர்சித்தும், பலர் ஆதரவு அளித்தும் கருத்துக்களை குவித்த வண்ணம் இருந்தார்கள். இதற்கு ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது, ஜோதிகா சொன்ன கருத்தில் எந்த ஒரு மாற்றமும், தவறும் இல்லை. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்றும் அன்பை விதைப்போம்” என்றும் கூறியிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கந்திலி ஒன்றியம், செல்லரப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கற்பகவள்ளி. இவர் திருப்பதி உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக ரூபாய் 40 ஆயிரத்தை சேர்த்து வைத்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான ஏழை மாணவர்களின் குடும்பங்கள் உணவு இல்லாமல் இருப்பதை கண்டு உள்ளார் கற்பகவள்ளி. பின் கற்பகவள்ளி தனது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எல்கேஜி, யுகேஜி, மழலையர் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். இந்த ஆசிரியர் தம்பதியின் செயலைப் பார்த்து பலரும் பாராட்டுகளை குவித்த வண்ணம் வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பள்ளி ஆசிரியை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement