ங்கு சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி கே.விஸ்வநாத் நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் கலக்கியவர். இவர் தமிழ் ஹிந்தி என பழமொழிகளில் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே பெரிய வெற்றி பெற்று இருக்கின்றன. இவர் 1965 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் அக்னேனி நாகேஸ்வரர் நடிப்பில் வெளியான “ஆத்ம கௌரவம்” என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகினார்.

பன்முக திறமை கொண்டவர் :

அப்போது வெளியாகிய அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து இவருக்கு பெரிய பேரையும், புகழையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்தது. அதற்கு பிறகு பல படங்களை இவர் இயக்கி வெற்றி பெற்றுள்ளார். இவர் இயக்கிய படங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சங்கபுராணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இவருக்கு பெயரை பெற்று தந்தது. மேலும் கமலஹாசனுக்கு மிகவும் பிடித்த மனிதராக கே விஸ்வநாத் இருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

Advertisement

நடித்த படங்கள் :

இதில் சலங்கை ஒழி, முத்து போன்ற படங்களில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்தார் தமிழ், மலையாளம். தெலுங்கு என மூன்று மொழிகளில் இப்படங்கள் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இயக்குனராகிய இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இறங்கிய இவர் தமிழ் சினிமாவில் குறிப்பாக கமலஹாசனின் உடல் உத்தவில்லின், 2000ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் முகவரி, பின்னர் 2003ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் புதிய கீதை, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி போன்ற படங்களில் விசுவநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வயது மூப்பு காரணமாக :

இந்த அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால் என் கூட குறிப்பிடத்தக்கது.இப்படி தான் சினிமாவில் சேர்ந்த காலத்தில் இருந்து சினிமா துறையில் இயக்குனர், நடிகர் என மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் விஸ்வநாத் அவர்களும் ஒருவர். 1930ஆம் ஆனது பிறந்த இவர் தன்னுடைய வயது மூப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில்

Advertisement

மற்றொரு சோகம் :

இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தன்னுடைய 92 வயதில் கே விஸ்வநாத் காலமானார். இவரின் இறுதி சடங்கில் ரஜினிகாந்த், கமலஹாசன் முதற்கொண்டு பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தில் கே.விஷ்வநாத் சோகம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே மற்றொரு சோகம் நடந்துள்ளது. அதாவது கே.விஸ்வநாத் மனைவி ஜெயலட்சிமி வயது மூப்பில் காரணமாக காலமாகி இருக்கிறார்.

Advertisement

ஒரே மாதத்தில் கணவர் மற்றும் மனைவி இறப்பு :

இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு பலரும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர். கே விஸ்வநாத் 20 வயதில் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். அப்போது, ​​கே விஸ்வநாத் தனது தொழிலில் இன்னும் செட்டில் ஆகவில்லை என்பது குறிப்பிடதக்கது. விஸ்வநாதன் இறந்து 24 நாட்களில் அவரது மனைவியம் காலமாகி இருப்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement