காதல் கொண்டேன் ஆதியா இது ? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ? எப்படி ஆகிட்டார் பாருங்க

0
1533
Sandeep
- Advertisement -

தனுஷின் காதல் கொண்டேன் பட நடிகர் சுதீப் சரங்கியின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் காதல் கொண்டேன்.

-விளம்பரம்-

இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுஷ் உடன் சோனியா அகர்வால், நாகேஷ், சுதீப் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

காதல் கொண்டேன் சுதீப் சரங்கி:

மேலும், இந்த படத்தில் சோனியா அகர்வாலின் காதலனாக நடித்தவர் தான் நடிகர் சுதீப் சரங்கி. இவர்
மாடலிங் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்குப்பின் இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கூத்து பட்டறையில் சேர்ந்து பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவர்
தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சுதீப் சரங்கி நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து இவர் என்னமோ பிடிச்சிருக்கு என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரியளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படவில்லை. அதற்குப் பிறகும் இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் இவர் பெங்காலி மொழியில் படங்களில் நடித்து வந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-

சுதீப் சரங்கி நடித்த மொழிகள்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் பெங்காலி, இந்தி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில விளம்பரங்களிலும் நடித்தார். அதற்குப் பிறகு நடிகர் சுதீப் சரங்கி என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் சுதீப் சரங்கியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

நடிகர் சுதீப் சரங்கியின் லேட்டஸ்ட் புகைப்படம்:

அதில் அவர் பார்ப்பதற்கு பயங்கர ஒல்லியாக அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, காதல் கொண்டேன் பட நடிகராக இவர்! அடையாளமே தெரியவில்லை என்று அதிர்ச்சியில் கமண்ட் செய்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் நடிகர் சுதீப் சரங்கியின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.

Advertisement