அடையாளம் தெரியாமல் மாறிப்போன காதல் மன்னன் நடிகை ! புகைப்படம் உள்ளே

0
12095
kadhal-mannan-Actress-Maanu
- Advertisement -

தல அஜித்தின் காதல் மன்னன் படத்தில் திலோத்தம்மா கேரக்டரில் ஒருவர் நடித்திருப்பார். அவருடைய உண்மையான பெயர் தெரியுமா? அவர் எந்த ஊர் எனதெரியுமா? தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

-விளம்பரம்-

Actress-manu

- Advertisement -

அவருடைய உண்மையான பெயர் மானு. இவர் 1982ஆம் ஆண்டு அசாமில் உள்ள கவுகாத்தி மாவட்டத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே டான்சில் திறமை வாய்ந்தவராக விளங்கினார் மானு. கதக், பரதநாட்டியம் மற்றும் மணிப்பூரி ஆகிய நடன கலைகளில் மிகத் திறமை வாய்ந்தவராக விளங்கினார் மானு.

இவருடைய நடனத்தை பார்த்த நடிகர் விவேக் தனது நண்பர், இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதன்பின்னர் மானுவின் 16 வயதில் வந்த வாய்ப்பு தான் தல அஜித்தின் காதல்மன்னன் பட வாய்ப்பு. இந்த படத்தில் இவர் நடித்த திலோத்தம்மா கேரக்டர் இன்றுவரை பேசப்படும் கேரக்டராகும்.

-விளம்பரம்-

manu

kadhal-mannan-maanu

maanu

இந்த படத்தில் நடித்த பிறகு மானு அதன்பின்னர் நடிக்கவே இல்லை. தனக்கு தெரிந்த டான்ஸ் கலைகளை கொண்டு ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்தார் மானு. மேலும், சந்தீப் துரா என்னும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுனரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டபோது அவருடன் இருந்து கவனித்துகொண்டது மானுதான். அதன்பின்னர் ரஜினிகாந்த் வற்புறுத்தியதன் பேரில் கடந்த 2014ஆம் ஆண்டு மோகன்ராஜா நடிப்பில் வெளிவந்த என்ன சத்தம் இந்த நேரம் என்னும் படத்தில் 16 வருடங்களுக்கு பிறகு நடித்தார் மானு.

Maanu-actress

Actress-maanu

இந்த படம் கை கொடுக்காததால் மீண்டும் சென்னையில் உள்ள தனது டான்ஸ் ஸ்கூலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் மானு. வெறும் 2 படங்களே நடித்திருந்தாலும் திலோத்தம்மா என்ற பெயர் கூறினால் இன்று வரை மானுவை எல்லோருக்கும் தெரியும்.

Advertisement