தன்னுடைய கணவரை குறித்து பெருமையாக காதல் மன்னன் பட நடிகை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவர் நடித்த படங்களிலேயே மிகவும் முக்கியமான படம் என்று சொன்னால் அது “காதல் மன்னன்” தான். அஜித் அவர்கள் சினிமா துறையில் இந்த அளவிற்கு புகழ் உச்சத்தில் இருப்பதற்கு முக்கியமான பங்கு என்று சொன்னால் ‘காதல் மன்னன்’ படத்தையும் சொல்லலாம்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திலோத்தமா நடித்து இருந்தார். உண்மையிலேயே இவர் பெயர் திலோத்தமா என்று தான் அதிக பேர் நினைத்து இருக்கிறார்கள். ஆனால், இவருடைய உண்மையான பெயர் மானு. இவர் 1982 ஆம் ஆண்டு அசாமில் உள்ள கவுகாத்தி மாவட்டத்தில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர். அதனால் கதக் ,பரத நாட்டியம் மற்றும் மணிப்பூர் ஆகிய பல கலைகளை கற்று அதில் சிறந்து விளங்கினார்.
மானு குறித்த தகவல்:
அதுமட்டும் இல்லாமல் மானு அவர்கள் மேடை நிகழ்ச்சிகளை கூட நிகழ்த்தி இருக்கிறார். பின் மானுவின் நடனத்தை பார்த்து நகைச்சுவை நடிகர் விவேக் தான் தன்னுடைய நண்பர் இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன் பின்னர் தான் மானு அவர்கள் அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பேசப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு திலோத்தமா கதாபாத்திரம் இளைஞர்களை கவர்ந்தது.
நடிகை மானு பேட்டி:
மேலும், மானு இந்த படத்திற்கு பின்பு வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. இவர் சினிமா உலகிற்கு வரும் போது வெறும் 16 வயது தான். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மானு, நான் சினிமா பின்னணி கொண்டவள் கிடையாது. எல்லோரும் டாக்டர்கள் தான். என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன். பள்ளி படிக்கும்போதே கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தனர்.
சினிமா அனுபவம்:
அதிலும் விவேக் மற்றும் சரண் இருவரும் கட்டாயப்படுத்தி தான் நடிக்கவைத்தனர். படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் நான் அதில் மட்டும் அதன் பிறகு கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். என் கணவரும் தற்போது டாக்டராக தான் இருக்கிறார். 22 ஆண்டுகள் கழித்தும் அந்த படம் இன்னமும் மக்கள் மனதில் பேசப்படுகிறது என்றால் அந்த பெருமை எல்லாம் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு தான் சேரும். மேலும், எனக்கு திருமணம் நடந்தது. ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்பதால் திருமணம் செய்து கொண்டேன்.
கணவர் குறித்து சொன்னது:
அவரை நான் கணவனாக பார்த்தது கிடையாது. என்னுடைய பெஸ்ட் நண்பர். அவரைப் போல் சிறந்த கணவர் இந்த உலகில் இல்லை என்று தான் சொல்வேன். அந்த அளவிற்கு நல்ல மனிதர். என்னுடைய வாழ்க்கையின் இன்னொரு பக்கம் அழகாக ஆரம்பித்தது என்று பெருமையாக பேசி இருந்தார். இவரை அடுத்து நடிகை மானுவின் கணவர் டாக்டர் சந்தீப் அழகாக தமிழில் பேசினார். இவர் கேன்சர் சர்ஜர் ஸ்பெசலிஸ்ட். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும், உண்மையான காதல் காதல் மன்னன் இவ்வளவு அழகா தமிழ் பேசுகிறாரா! என்று வியப்பில் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.