இயக்குனர் ப ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தி நடிகர் நானா படேகர் சமுத்திரகனி சாயாஜி சிண்டே ஈஸ்வரி ராவ் என்று பல்வேறு நடிகர் நடித்த இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் முன்னாள் காதலியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஹுமா குரோஷி. தமிழில் இவர் புதிது என்றாலும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மாடல் அழகியான இவர் இந்தியில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்ஸ் ஆப் வாசிபூர் என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்த இவர் விக்டோரியா ஹவுஸ் என்ற ஆங்கிலத் திரைப் படத்திலும் நடித்திருந்தார். மேலும் இவர் நடித்த படங்களுக்காக சிறந்த நடிகை என்ற விருதினை பலமுறை பெற்றிருக்கிறார். காலா படத்தில் இவர் நடித்ததற்கு காரணமே சூப்பர் ஸ்டார் தான் என்று பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் டோலிவுட் சீனியர் நடிகர் வெங்கடேஷ், நாக சைதன்யா இணைந்து நடிக்கும் புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஹுமாவுக்கு வாய்ப்பு தேடி வந்தது.
அப்பட இயக்குனர் கேஎஸ்.ரவிந்திரா, வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கும்படி குரோஷியிடம் கேட்ட போது அதற்கு நோ சொல்லி இருக்கிறார் ஹீமா. தற்போது 33 வயதாகும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் படு மோசமான ஆடைகளில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் தொலைக்காட்சி பக்கம் சென்ற நடிகை ஹூமா குரேஷி தற்போது லைலா என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார் . மேலும், இவர் ஏற்கனவே நடித்த ஆர்மி ஆப் டெத் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடேஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் வரும் 2020ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது