Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.11.25பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு அரசியலா ?' - எப்படி இருக்கிறது சசி குமாரின் 'காரி' - முழு விமர்சனம்.

எழுதியவர்Rajkumar25 நவம்பர், 2022 அன்று 12:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சசிகுமார். இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காரி. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் நடித்த நான் மிருகமாய் மாற படம் கடந்த வாரம் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று வெளியாகி இருக்கும் காரி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

'மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு அரசியலா ?' - எப்படி இருக்கிறது சசி குமாரின் 'காரி' - முழு விமர்சனம்.

கதைக்களம்:

படத்தின் ஆரம்பத்தில் ராமநாதபுரம் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அரசாங்கம் அந்த ஊரை குப்பை கொட்டுவதற்கான இடமாக தேர்வு செய்கிறது. இதனால் இந்த ஊர் மக்கள் கொந்தளித்து போய் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், சசிகுமார் தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறார். இவர் ரேஸ் குதிரைகளை பராமரித்து வருகிறார்.

மறுபக்கம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை கார்ப்பரேட் வில்லன் ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். இந்த மூன்று சம்பவங்களும் ஒரே இடத்தில் சேருகிறது. இந்த அரசாங்க பிரச்சனையிலும், கார்ப்பரேட் வில்லனிடமும் சசிகுமார் எப்படி மாட்டினார்? இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டாரா? மக்களுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கம்போல் இல்லாமல் தன்னுடைய நடிப்பு ஆற்றலை சசிகுமார் திறமையாக இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

'மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு அரசியலா ?' - எப்படி இருக்கிறது சசி குமாரின் 'காரி' - முழு விமர்சனம்.

இது சசிகுமாருக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம். அவருக்காக எழுதப்பட்ட கதை ஆகவே இந்த படம் இருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவை இல்லை என்றாலும் எமோஷனல் காட்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் சசிகுமார். குறிப்பாக, காளை மாட்டை வைத்து வரும் காட்சிகள் எல்லாம் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. கிளைமாக்ஸில் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான பேட்டை காளி வெப்சைட் அதிகம் நினைவு படுத்தியது என்றே சொல்லலாம். கதாநாயகியாக வரும் பார்வதி அருண் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவரை தொடர்ந்து அப்பாவாக பாலாஜி சக்திவேல் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இயக்குனர் மண்வாசம் மாறாமல், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தையும், மக்களின் நிலைமையும் அழகாக சொல்லி இருக்கிறார். இதற்கு பக்கபலமாக இமானின் பின்னணி இசை இருந்திருக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே அருமையாக வந்திருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் படத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் காரி படம் நன்றாக இருக்கிறது.

நிறை

சசி சசிகுமாரின் நடிப்பு சிறப்பு

கதைக்களம் அருமை

திரைக்கதையை இயக்குனர் கொண்டு சென்ற விதம் சூப்பர்

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது

எமோஷனல் காட்சிகள் அருமையாக இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

படம் முழுவதும் எமோஷனல் காட்சிகளாக இருக்கிறது.

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் சசிகுமாரின் காரி - தலைவன்

தலைப்புகள்
#Kaari Review#Kaari#காரி விமர்சனம்#காரி#sasi kumar
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement