காற்றின் மொழி சீரியல் நடிகையா, தெலுங்கில் இப்படி நடித்துள்ளார் – வைரலாகும் வீடியோ.

0
955
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் நாயகனாக ராஜா ராணி புகழ் புகழ் சஞ்சீவ்வும் நாயகியாக பிரியங்கா என்பவரும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரியங்கா ஜெயின். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த பிரியங்கா ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் புதிதானவர் தான்.இந்த சீரியல் விரைவில் நிறைவடைய இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.இப்படி ஒரு நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இந்த சீரியல் நிறைவடைந்தது. இந்த சீரியல் 485 எபிசோடுகள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் சஞ்சீவை விட பிரியங்கா தான் ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

காற்றின் மொழி தொடரில் அழகிய கிராமத்து தோற்றத்தில் இருந்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். இவரது சமூக வளைதள பக்கத்திலும் படு மாடர்ன் கோலத்தில் பல புகைப்படங்கள் இருந்து வருகிறது. அதே போல இவர் தெலுங்கு படம் ஒன்றில் படு கிளாமராக நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement