லாக்டவுனுக்கு இடையே காதலருடன் திருமணத்தை முடித்த காற்றின் மொழி சீரியல் நடிகை.

0
3051
rosy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றின் மொழி தொடரில் நடித்து வரும் விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியலும் ஒன்று.

-விளம்பரம்-

ஏற்கனவே சஞ்சீவ் நடித்த ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதனால் தற்போது சஞ்சீவ் நடித்து வரும் காற்றின் மொழி தொடரில் ராஜா ராணி தொடரில் சஞ்சீவிற்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதால் தற்போது சஞ்சீவ் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.அதே போல இந்த தொடரில் ரோஸி என்ற கதாபாத்திரப்பதில் நடித்து இருந்தவர் நடிகை வைஷ்ணவி ராஜசேகரன்.

இந்த நிலையில் இவர் தனது நீண்ட நாள் காதலரான சாய் விக்னேஷ்வர் என்பவரை திருமணம் செய்துகொண்டு உள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று உள்ளது. மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

Advertisement