சீரியலில் ஹோம்லி கேர்ள் இன்ஸ்டாவில் கிளாமர் கேர்ள்- காற்றுக்கென்ன வேலி வெண்ணிலாவா இது.

0
3825
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மைசூரில் தான் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்த இவர், கண்ணட சேனல் ஒன்றில் கிருஷ்ணா துளசி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த தொடர் கன்னடத்தில் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற தொடர்களிலும் நடித்து தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த தொடர் மலையாளத்தில் ஒளிபரப்பான ‘சாக்லேட்’ என்ற சீரியலின் ரீ – மேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்தார்.

இதையும் பாருங்க : அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகும் அனிதா – பிரபல நடிகர் மற்றும் நடிகையுடன் வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா. இவர் நடித்த அனைத்து சீரியலிலும் இவர் மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால், நிஜத்தில் அம்மணி படு மாடர்ன் பேர்வழி தான்.

This image has an empty alt attribute; its file name is 1-141.jpg

சீரியலில் குடும்ப குத்து விளக்காக படு ஹோம்லியாக இருக்கும் இவர் மாடல் அழகி என்பதால் படு கவர்ச்சியான உடைகளில் கூட போட்டோ ஷூட் நடாத்தியுள்ளார். அந்த வகையில் இவர் உள்ளாடை அணிந்து புடவை கட்டிக்கொண்டு படு கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement