அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகும் அனிதா – பிரபல நடிகர் மற்றும் நடிகையுடன் வெளியிட்ட புகைப்படம்.

0
2471
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது நான்கு சீசன்களை கடந்து 5 வது சீசன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத்.

இவர் முதன்முதலாக தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். செய்தி வாசித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். இதன் மூலமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சர்ச்சைகளில் சிக்கி இவருடைய பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது என்று சொல்லலாம்.

- Advertisement -

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி டைட்டில் வின்னர் ஆனார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் அனிதா சம்பத் அவர்கள் தமிழ் சினிமா உலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து உள்ளார். தற்போது அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

பதிவிட்டு அதில் அவர் கூறி இருப்பது, என்னுடைய அடுத்த படம் இந்த இரண்டு அன்பர்களுடன் நடிக்கிறேன். அதற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அனிதா சம்பத் அவர்கள் சத்யராஜ், மீனா உடன் எடுத்துள்ளார். இவர் நடிக்கும் படத்தில் சத்யராஜ், மீனா என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படம் என்ன என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் அனைவரும் அனிதாவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement