’15நாள்ல எப்ப வேணா ரூமுக்கு வந்துட்டு போவோம்’னு சொன்னாங்க – அட்ஜஸ்டமெட் குறித்து கேட்ட இயக்குனரை நாறடித்துள்ள நடிகை.

0
1208
Jeevitha
- Advertisement -

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த இயக்குனரை பிரபல சீரியல் நடிகை ஜீவிதா வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஜீவிதா. இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு மீடியாவில் நுழைந்தார்.

-விளம்பரம்-

இவருக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்தது. மேலும், இவர் முதன் முதலாக படங்களில் தான் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். இருந்தாலும், அவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார். இவர் ஆபீஸ் என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஜீவிதா திரைப்பயணம்:

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு என்ற சீரியலில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஜீவிதா நடித்து இருந்தார். இதை தொடர்ந்து இவர் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்று என்பது தான் ஆசையாம்.

ஜீவிதா அளித்த பேட்டி:

இந்த நிலையில் சினிமா வாய்ப்புக்காக சென்ற இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து சமீபத்தில் ஜீவிதா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சினிமாவில் ஹீரோனியாக நடிக்க வாய்ப்பு தருவதாக போனில் அழைத்து இருந்தார்கள். பாலுமகேந்திராவின் அலுவலகம் பக்கத்தில் தான் எங்களுடைய ஆபீஸ் இருப்பதாக கூறி இருந்தார்கள். அப்போது நான் சினிமாவுக்கு புதுமுகம். என்னை யாருக்குமே தெரியாது.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு:

உடனே நான் அங்கு ஆட்டோவில் சென்றேன். அங்கு முதலில் அவர்கள் நன்றாக பேசினார்கள். படத்தில் நீங்க தான் இரண்டாவது ஹீரோயின். முதல் ஹீரோயின் நல்ல பிரபலமானவர்கள் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொன்னேன். இனி நீங்க தான் சம்மதம் தெரிவிக்க வேண்டும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும் என்று சொன்னார்கள். அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் என்ன என்று கேட்டபோது அந்த இயக்குனர் என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணனும். அதேபோல் கேமராமேன், தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோரையும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று சொன்னார்

இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை:

நாங்க எப்ப வேணாலும் ரூமுக்கு வந்துட்டு போவோம்.தஞ்சாவூர் பக்கத்தில் 15 நாள் இது நடக்கும். இதுக்கெல்லாம் ஓகே என்றால் நீ எதிர்பாக்காத அளவுக்கு சம்பளம் தருவேன். அது மட்டும் இல்லாமல் அந்த சம்பளத்துடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தந்து சினிமாவில் உயர்த்தி விடுவோம் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் அப்படி சொன்னதை கேட்டு எனக்கு கண்ணீர் தான் வந்தது. அவர்கள் முன் அழக்கூடாது என்று உடனே அந்த இடத்தில் இருந்து கிளம்பி விட்டேன் என்று அந்த இயக்குனரை நடிகை ஜீவிதா வெளுத்து வாங்கி இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

Advertisement