‘கடைசியா அவர பாக்கும் போது எதுக்கு சென்னை போற இங்கயே மாடு மேய்க்கலாம்னு தாத்தா சொன்னப்ப’ – கடைசி விவசாயி ரேச்சல்.

0
1717
Raichal Rabecca Philip
- Advertisement -

நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடைசி விவசாயி படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. மேலும், படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தில் இயற்கையான முறையில் விவசாயம், காலப்போக்கில் அது செயற்கை ரசாயன உரங்களாக மாறியது, ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை பயன்படுத்துபவர்கள் என பல விஷயங்களை காண்பித்து இருக்கிறார்கள். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது. மேலும், இந்த படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றவர் ரேச்சல் ரெபேக்கா.

- Advertisement -

ரேச்சல் ரெபேக்கா அளித்த பேட்டி:

இவர் ஆயுர்வேத மருத்துவர் மருத்துவர். இருந்தாலும் நடிப்பின் மீதுள்ள காதலால் இவர் சினிமாவிற்குள் நுழைந்தார். இந்த நிலையில் ரேச்சல் ரெபேக்கா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, மணிகண்டன் சார் எனக்கு நண்பராக ரொம்ப நாளாகவே தெரியும். அவரிடம் சும்மா பேசும்போது நடிப்பில் ஆர்வம் இருக்கிற விஷயத்தை சொன்னேன். அவர் இந்த படம் பண்ணத் தொடங்கும் போது என்னை ஞாபகம் வைத்துக் கூப்பிட்டார்.

பட வாய்ப்பு கிடைத்த காரணம்:

ஆரம்பத்திலேயே இது முக்கியமான கதாபாத்திரம் என்று எனக்கு தெரியும். மேலும், இந்த படத்தில் நடிப்புன்னா என்னன்னு மட்டும் இல்லாமல் ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை ஆரம்பம் முதல் இறுதிவரை என அத்தனையும் எனக்கு மணி சார் சொல்லிக் கொடுத்தார். இந்த கடைசி விவசாயி படத்தில் நான் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன். அதனால் அந்த ஊர் மக்கள் எல்லோரும் என்னை ஜர்ஜம்மா தான் கூப்பிட்டார்கள். உசிலம்பட்டியில் இப்ப எனக்கு ஒரு சொந்தமே உருவாகி இருக்கு. அந்த படத்தில் வருகிற தாத்தா நிஜத்திலும் என்னை பேத்தி மாதிரி தான் பார்த்துக்கொண்டார்.

-விளம்பரம்-

நல்லாண்டி தாத்தா சொன்னது:

அவர் எதுக்கு சென்னைக்கு போற, இங்கே இரு, மாட்டு பால் கறந்து விற்கலாம். இதுக்கு மேல என்ன வேணும்னு அவ்வளவு எதார்த்தமா என்னிடம் பேசினார். அவருக்கு உடல்நிலை சரியில்லைன்னு கேள்விப்பட்டதுமே கொரோனா லாக் டவுன் போடுவதற்கு முன் ஒருநாள் போயி நான் அவரை சந்தித்தேன். கடைசியாக அவரை சந்தித்தேன் என்ற மன திருப்தியும் எனக்கு இருக்கு. படம் ரிலீசாக நேரத்தில் அவர் இல்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் அந்த படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.
அவர் மட்டும் இல்ல அந்த படத்தில் நடித்த எல்லோருமே நடிக்கவில்லை வாழ்ந்து தான் இருந்திருக்கிறார்கள்.

படம் பார்த்து மிஸ்கின் சொன்னது:

உசிலம்பட்டியில் அந்த ஊர் மக்களோடு சேர்ந்து உட்கார்ந்து படம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. முதல் சீன் தாத்தா வந்ததுமே எல்லோரும் கைதட்டி விசிலடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். படம் பார்த்துட்டு சீனுராமசாமி சாரும்,மிஸ்கின் சாரும் என்னை பாராட்டினார்கள். மிஸ்கின் சார், ஒரு அழகான பொண்ணு முகத்தில் குங்குமப்பொட்டு எவ்வளவு அழகாக இருக்குமோ அப்படி இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகா இருக்கு என்று சொன்னார் என்று பல விஷயங்களை ரேச்சல் ரெபேக்கா கூறி இருக்கிறார்.

Advertisement