“ஆந்திராவில் தடுத்தால் இங்கு வாரிசு வெளியிட முடியாதுனு உதயநிதி தடுக்கிறார்” – கொளுத்தி போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்.

0
289
- Advertisement -

தமிழ்நாட்டு மக்களுக்கு வரும் பொங்கலன்று இரண்டு போனஸ் கிடைக்கவிருக்கிறது. அதாவது இயக்குனர் படிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும், இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் ஒன்றாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல எதிர்பார்ப்புகளுடன் துணிவு மற்றும் வாரிசு அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு 12 மற்றும் 13 தேதிகளில் வெளியாகவும் என்றிருந்த நிலையில் `தற்போது வாரிசு படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

வாரிசு திரைபடத்தில் பல காட்சிகள் நிறைவடைந்து சில நாட்களுக்கு முன்னர்தான் படத்தின் முதல் சிங்கிளானது வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் படத்தில் பாடலானது “மொட்ச கொட்ட பல்லழகி” என்ற பாடலின் காப்பி எனவும் இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடனமாடிய ராஷ்மிகா மந்தனாவின் நடனத்தின் மீதும் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மற்றொரு பிரச்சனை வாரிசு திரைப்படத்திற்கு உருவாகியுள்ளது.

- Advertisement -

அதாவது அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனமும், விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் தயாரித்திருக்கிறது. இதில் பிரச்னை என்னவென்றால் துணிவு திரைப்படமானது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்களின் மகனான உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

இதனால் இப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதினால் விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமிழ் நாட்டிலேயே குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த பிரச்னை ஒரு பக்கம் இருக்க தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் பண்டிகை காலங்களில் தெலுங்கு மொழியில் உருவாகும் திரைப்படங்களை மட்டுமே ஆந்திராவில் வெளியிடவேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகவும்

-விளம்பரம்-

அதனால் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கை பொங்கலுக்கு ஆந்திராவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்க்கு லிங்குசாமி, பேரரசு போன்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இதனை திரும்ப பெறவில்லை என்றால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.இப்படி வாரிசு திரைப்படத்திற்கு பல பிரச்னைகளை எழுந்த நிலையில் இதற்கெல்லாம் காரணம் உதயநிதிதான் என்று எதிர்கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

துணிவு படம் உதயநிதி அவர்களின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் என்பதினால் லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் இப்படி செய்திருப்பதாகவும் கூறிய கடம்பூர் ராஜு, மேலும் ஆந்திர தயாரிப்பாளர்கள் சங்கத்தை வாரிசு திரைப்படத்துக்கு எதிராக இவர் தான் மறைமுகமாக தூண்டி விட்டுள்ளார் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் இப்படி சொல்லி இருப்பது தற்போது சமூக வலைதளங்களை வைரலாகி அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement