அட கடவுளே, காதல் மன்னன் பட நடிகையா இது. என்ன இப்படி ஆகிட்டாரு.

0
93732
manu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்த படங்களிலேயே மிகவும் முக்கியமான படம் என்று சொன்னால் அது “காதல் மன்னன்” தான். அது மட்டும் இல்லாமல் தல அஜித் அவர்கள் சினிமா துறையில் இந்த அளவிற்கு புகழ் உச்சத்தில் இருப்பதற்கு முக்கியமான பங்கு என்று சொன்னால் ‘காதல் மன்னன்’ படத்தையும் சொல்லலாம். உண்மையிலேயே இவர் பெயர் திலோத்தமா என்று தான் அதிக பேர் நினைத்து இருக்கிறார்கள். ஆனால்,இவருடைய உண்மையான பெயர் மானு. நடிகை மானு அவர்கள் 1982 ஆம் ஆண்டு அசாமில் உள்ள கவுகாத்தி மாவட்டத்தில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர். அதனால் கதக் ,பரத நாட்டியம் மற்றும் மணிப்பூர் ஆகிய பல கலைகளை கற்று அதில் சிறந்து விளங்கினார்.

-விளம்பரம்-
Image result for kadhal mannan actress"

அதுமட்டும் இல்லாமல் மானு அவர்கள் மேடை நிகழ்ச்சிகளை கூட நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில் மானு அவர்களுடைய நடனத்தை பார்த்து நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய நண்பர் இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன் பின்னர் தான் மானு அவர்கள் தல அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் திரையுலகில் 1998ம் ஆண்டு ‘காதல் மன்னன்’ படம் வெளிவந்து செம மாஸ் படமாக மாறியது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடிகை மானு நடித்திருக்கிறார். அதோடு மானு அவர்கள் இந்த படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.

இதையும் பாருங்க : சர்ச்சையை ஏற்படுத்திய ‘லட்சுமி’ குறும்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம். மாப்பிள்ளை யார் தெரியுமா ? 

- Advertisement -

மேலும்,மானு ஒரு படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பேசப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு திலோத்தமா கதாபாத்திரம் இளைஞர்களை கவர்ந்தது. பின்னர் மானு அவர்கள் இந்த படத்திற்கு பின்பு வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. நடிகை மானு சினிமா உலகிற்கு வரும் போது வெறும் 16 வயது தான். அதோடு நடிகை மானு காதல் மன்னன் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன் பிறகு சந்தீப் துரா என்னும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை மானு அவர்கள் திருமணம் செய்துகொண்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தென்னிந்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நிலை குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் இருந்து கவனித்துக் கொண்டது நடிகை மானு தான்.

Image result for kadhal mannan actress"
Image result for kadhal mannan actress"

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வற்புறுத்தல் காரணமாக தான் மானு மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு மோகன் ராஜா நடிப்பில் வெளிவந்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் 16 வருடங்களுக்கு பிறகு நடித்தார் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை மானு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் காதல் மன்னன் நடிகையா! என அதிர்ந்து போய் உள்ளார்கள். மேலும், அவர் புகைப்படம் குறித்து பல கமெண்டுகளை கூறி வருகின்றனர். மேலும்,நடிகை மானு தனது தெரிந்த நடன கலைகளை கொண்டு ஒரு டான்ஸ் ஸ்கூலை ஆரம்பித்தார்.

-விளம்பரம்-
Advertisement